வெளியானது KGF 3 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..! – இதை கவனிச்சீங்களா..? – ரசிகர்கள் உற்சாகம்..!

யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.கே.ஜி.எஃப் 2 உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியானது.

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சலாம் ராக்கி பாய்’ என கொண்டாடி வருகின்றனர்.நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

இதன் அடுத்த பாகம், கடந்த 2020ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு ஏப்ரல் 14ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்பை யாஷ் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தொடர்கிறது.

கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யாஷ். கே.ஜி.எஃப் பை பிடிக்க யாஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள்.

இறுதியில் கே.ஜி.எஃப்பை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது தான் கதை. இந்நிலையில், தற்போது கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கதை இங்கே முடியவில்லை.. என்று கடல் மீது எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம், கடலில் விழுந்த ராக்கி பாயின் பயணம் மீண்டும் கடலில் இருந்தே தொடங்கும்.. என்று கணிக்க முடிகின்றது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!