“இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல…” – விஜய் குறித்து கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ்..!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 14 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் இருந்து ஏற்கெனவே வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது பீஸ்ட் மோட் என்ற மூன்றாவது பாடலை வெளியிடுவதாக படக்குழு நேற்று மாலை 6 மணியளவில் வெளியிட்டது. இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை, யோகி பாபு நடித்த ’கூர்கா’ படத்தின் கதை போல் இருக்கிறது என்றும் அதேபோல் நெட்பிளிக்ஸில் வெளியான ’மணி ஹெய்ஸ்ட்’ தொடர் போல் இருக்கிறது என்றும் சமூக வலைதளங்களிலும் ஒரு சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.இந்த செய்திகளை அடுத்து இயக்குனர் நெல்சன் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : RED HOT : குட்டியூண்டு ப்ரா.. டைட்டான லெக்கின்ஸ்.. சகலமும் தெரிய உஷ்ணத்தை கூடும் “பீஸ்ட்” நாயகி பூஜா ஹெக்டே..!

மக்கள் நடமாட்டம் ஒரு ஷாப்பிங் மாலை ஹை-ஜாக் செய்யும் கதை சினிமாவுக்கு புதிது இல்லை என்றாலும் சொல்லப்படும் விதத்தில், காட்சிகள் உருவாக்கத்தில் தான் ‘பீஸ்ட்’ திரைப்படம் வேறுபடுகிறது. நானும் ‘கூர்கா’ படத்தையும் பார்த்துள்ளேன். அந்த படத்தின் கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே போல் ’மணி ஹெய்ஸ்ட்’தொடருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பொதுவாக என்னுடைய திரைப்படங்களில் டிரெய்லர் ஒரு மாதிரியாகவும் படங்கள் வேறு மாதிரியாகவும் இருக்கும். அதே போல் தான் ‘பீஸ்ட்’ படமும் இருக்கும் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள் என்றார். இந்நிலையில், பீஸ்ட் படத்துடன் மோதும் பிரமாண்ட படைப்பான கே.ஜி.எஃப் 2-விற்கு தமிழகத்திற்கு தியேட்டர் எண்ணிக்கை குறைவாகவே கிடைத்துள்ளது.

இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் விஜயை பற்றி பேசிய கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ், நானும் விஜய் சாருடைய ஃபேன் தான் என்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் அவரின் படத்தோடு கே ஜி எப் 2 மோதும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. கேஜிஎஃப் 2 மிகப்பெரிய ஹிட் கொடுக்கணும் அதேபோல பீஸ்ட் படமும் ஹிட் கொடுக்கணும்.

இரண்டும் ஒரே அளவில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர வேண்டும் என்றும் இதுதான் என்னுடைய ஆசையாக உள்ளது என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தால் எனக்கும் சந்தோஷம்தான். அதேபோல கேஜிஎப் 2 திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று நடிகர் யாஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …