“அந்த காட்சியை பார்த்து…” என் பாட்டி சொன்னது இது தான்..! – கியாரா அத்வானி ஒப்பன் டாக்.!

பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி பாலிவுட்டில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர். ஒருகட்டத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப்சீரிஸ் நடித்த பிறகு முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை கியாரா அத்வானி தான் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் அம்மணி.

அந்தவகையில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப்சீரிஸில் குடும்பத்தினர் முன்பு சுய இன்பம் காணும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இந்த காட்சி இந்த படத்திற்கு மிகப் பெரிய புரமோஷன் ஆக அமைந்தது என்று கூறலாம்.

இந்த காட்சிகள் இணையத்தில் சகட்டுமேனிக்கு வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த காட்சியை என்னுடைய குடும்பத்தினர் எப்படிப் பார்த்தார்கள்.. குறிப்பாக என்னுடைய பாட்டி எப்படி பார்த்தார் என்று தன்னுடைய பதில் கொடுத்திருக்கிறார் நடிகை கியாரா அத்வானி.

அவர் கூறியதாவது, இந்த வெப்சீரிஸில் நான் நடிப்பதற்கு முன்பே என்னுடைய குடும்பத்தினரிடம் இதுபற்றி பேசி இந்த காட்சியில் இப்படி நடிக்கிறேன்.. இப்படித்தான் வரும்.. என்று அவர்களை தெளிவாகினேன். அவர்கள் ஒப்புக் கொண்ட பிறகுதான் இந்த வெப்சீரிஸில் நடித்தேன்.

எனவே இந்தக் காட்சி எப்படி இருக்கும் எப்படி படமாக்கப்பட்டிருக்கும் எப்படி ரசிகர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று எல்லா விஷயமும் எனது குடும்பத்திற்கு தெரியும். ஆனால் என்னுடைய பாட்டிக்கு நான் இப்படி ஒரு காட்சியை நடித்திருப்பது தெரியாது.

ஒரு நாள் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த பொழுது அவருடன் இந்த படத்தை நான் பார்த்தேன். அப்போது குறிப்பிட்ட இந்த காட்சி முடிந்த பிறகு வீடியோவை நிறுத்திவிட்டு.. பாட்டி நான் என்ன செய்கிறேன் என்று புரிகிறதா…? இது என்ன காட்சி என்று புரிகிறதா..? என்று கேள்வி எழுப்பினேன்.

அவர் எதுவுமே பேசாமல் இருந்தார். பிறகு நானே அந்த காட்சியை விரிவாக எடுத்துக் கூறினேன். அதாவது, ஒரு பெண் சுய இன்பம் செய்கிறாரள் அதனை அவளது குடும்பத்தினர் பார்த்து விடுகிறார்கள்  என்று கூறினேன்.

இதைக்கேட்ட என்னுடைய பாட்டி அடக்கடவுளே.. உன் குடும்பத்தினர் மட்டும் பார்க்கவில்லை. தற்போது உலகமே இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று என்னிடம் கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு விஷயத்தை தெளிவாக கூறி அவருக்கு நான் புரிய வைத்தேன் என்று கூறியிருக்கிறார் நடிகை கியாரா அத்வானி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் படம் வரக்கூடாதுன்னு சொல்றது நீ யார்..? உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்தை விளாசும் விஷால்..!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் விஷால் தனது வெல்லந்தித்தன நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் …