இதனால் தான் ஷாந்தனு-வை பிரிந்தேன்..! – பல ஆண்டு ரகசியத்தை உடைத்த கிகி விஜய்..!

தற்பொழுது கணவன் மனைவியாக இருக்கும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் கிகி விஜய் இருவரும் ஆரம்ப காலத்தில் சிறு பிரச்சனை காரணமாக இடையில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பிரிந்து இருந்திருக்கின்றனர்.

இந்த பிரிவு எதனால் ஏற்பட்டது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் தொகுப்பாளினி கிகி விஜய்.

சாந்தனுவை காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் வேறொரு பெண்ணுடன் ஒரு காஃபி ஷாப் ஒன்றில் காஃபி  அருந்தி கொண்டிருக்கிறார் என்று என்னுடைய தோழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினார்.

உடனே நான் சாந்தனுவை தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய்..? என்று கேட்டேன். அவர் தன்னுடைய அப்பாவுடன் எதையோ விவாதித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

அந்த காஃபி ஷாப்பில் தான் நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களா..? என்று கேட்டேன். என்னிடம் பொய் சொல்லியதால்..  அப்போது சண்டை ஏற்பட்டது.

இதனால் இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவு எடுத்து 8 ஆண்டுகள் பிரிந்து இருந்தோம். அதன் பிறகு மேடை நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அப்பொழுது எங்களுடைய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் காதல் பாடல்கள் போட்டு போட்டு இருவருக்குள்ளும் மீண்டும் காதலை பற்றவைத்து விட்டனர்.

அப்போது காதலிக்க ஆரம்பித்தோம். திருமணமும் செய்து கொண்டோம். எனக்கு பொசசிவ்னஸ் ரொம்ப ரொம்ப அதிகம். அது என்னுடைய தவறு கிடையாது என்று பேசி இருக்கிறார் கிகி விஜய்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …