“நீங்க உங்க வீட்டில் சமையல் செய்கிறீர்களா..!” – அப்ப கண்டிப்பா சமையல் டிப்ஸ் உங்களுக்குத்தான்..!

பொதுவாக வீட்டில் சமையல் செய்பவர்கள் சில சமயம் குறிப்பிட்ட பொருட்கள் வீட்டில் இல்லாத சமயம் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவார்கள். அப்படி இனிமேல் தடுமாற வேண்டாம். இருக்கின்ற பொருளைக் கொண்டு சிறப்பாக உங்கள் சமையலை முடிக்கக்கூடிய சில அருமையான சமையல் குறிப்புகளை இந்தப் பதிவில் நீங்கள் படிக்கலாம்.

 சமையலை எளிதாக முடிக்க கூடிய சமையல் குறிப்புகள்

👍நீங்கள் ரசம் வைக்கும் போது ரசப்பொடி இல்லை என்றால் இனிமேல் கவலைப்பட வேண்டாம். மிளகு, சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனோடு சிறிதளவு துவரம் பருப்பையும் போட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து ரசத்தில் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.

👍இந்தக் கோடை காலத்தில் நீங்கள் எவ்வளவு பக்குவமாக உங்கள் வீட்டில் இருக்கும் தயிர், மோரை வைத்திருந்தாலும் உடனே புளித்து விடும். இதனை தடுக்க அந்தப் பொருட்களில் சிறிதளவு இஞ்சி தோலை போட்டால் போதும் புளிக்கவே செய்யாது.

👍வர மிளகாய் நீங்கள் மசாலாவுக்காக வறுக்கும் போது நெடி ஏற்பட்டு வீட்டில் இருக்கும் அனைவருக்குமே தும்மல் ஏற்படும். இதை தடுக்க நீங்கள் மிளகாய் வறுக்கும் போது சிறிதளவு உப்பு போட்டு வறுத்து பாருங்கள் அந்த நெடி ஏற்படாது.

👍நீங்கள் உங்கள் பிரிட்ஜில் பச்சை மிளகாய், வெண்டைக்காயை ஸ்டோர் செய்யும் போது பச்சை மிளகாய் இன் காம்பையும் வெண்டைக்காயின் காம்பையும் நீக்கி விட்டு வைத்தால் அப்படியே பிரசாக இருக்கும்.

---- Advertisement ----

👍தோசை சுடும் போது உங்கள் தோசை வராமல் அப்படியே தோசை கல்லில் ஒட்டிக்கொள்ளும் இப்படி இருந்தால் நீங்கள் வெங்காயத்தை வெட்டி தோசை கல்லில் தேய்க்கலாம். இல்லையென்றால் கொஞ்சம் போல புளியை எடுத்து அதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி எண்ணெயில் தொட்டு தோசை கல் முழுவதும் தடவி விட்டு தோசையை சுட்டுப் பாருங்கள் மிக நன்றாக தோசை வரும்.

👍உருளைக்கிழங்கு சிப்சை வீட்டில் போடும்போது நன்கு மொறுமொறுவென்று வர வேண்டுமென்றால் சிறிதளவு பயத்தம் மாவை தூவி விட்டு பொறித்தால் சுவையும் மொறுமொறுப்புத் தன்மையும் கூடுதலாக இருக்கும்.

எனவே மேற்கூறிய சமையல் குறிப்புகளை உங்கள் சமையலறையில் நீங்கள் பயன்படுத்தி நல்ல பயன்களை பெறலாமே.

---- Advertisement ----