மாஸ் ஹீரோவாக நடிக்கிறேன் என மார்க்கெட்டை இழந்த தமிழ் பிரபலங்கள்!. அட கொடுமையே!..

மாஸ் ஹீரோவாக நடிக்கிறேன் என மார்க்கெட்டை இழந்த தமிழ் பிரபலங்கள்!. அட கொடுமையே!..

சினிமாவை பொருத்தவரை எடுத்தவுடனேயே சண்டை காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைப்பது அரிதுதான். அது அதிக விமர்சனத்திற்கு உள்ளாவது உண்டு நடிகர் விஜய் தனுஷ் மாதிரியான நடிகர்கள் கூட ஆரம்பத்தில் எடுத்த உடனே சண்டை படங்களாக நடித்த காரணத்தினால்  அவர்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார்கள்.

ஏனெனில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை எடுத்த உடனே மக்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆனால் அதற்குப் பிறகு நடித்த படங்களில் சுதாரித்துக் கொண்டு நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அவர்கள் வளர்ந்து விட்டார்கள்.

ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல்  மாஸ் ஹீரோவாக நடிக்கிறேன் என்று கூறி  அந்த படத்தின் வழியாக தோல்வியை கண்ட இரண்டு நடிகர்களையும் அவர்களின் படங்களையும்தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

நடிகர் பரத்:

நடிகர் பரத் பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பாய்ஸ் திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவர் நடித்த காதல் திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது

மாஸ் ஹீரோவாக நடிக்கிறேன் என மார்க்கெட்டை இழந்த தமிழ் பிரபலங்கள்!. அட கொடுமையே!..
????????????????????????????????????

பரத் ஆரம்பத்தில் சினிமாவிற்கு அறிமுகமான பொழுது குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களாகதான் அவரது திரைப்படங்கள் இருந்தது. நடிகர் பரத்தின் படங்கள் அதிகமாக குடும்ப ஆடியன்ஸ்க்கு பிடித்திருந்தது. ஆனாலும் கூட பரத்திற்கு ஒரு ஆக்சன் கதாநாயகனாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.

அதனை தொடர்ந்து பரத் பழனி, சேவல், திருத்தணி மாதிரியான திரைப்படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கினார். பழனி திரைப்படம் கூட ஆவரேஜான ஒரு வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு வந்த சேவல், திருத்தணி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் பெரும் தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து சினிமாவில் வரவேற்பை இழந்தார் நடிகர் பரத்.

நடிகர் பிரசாந்த்:

தனது பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு எடுத்த உடனே கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு என்கிற திரைப்படத்தின் மூலமாக இவர் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார்.

மாஸ் ஹீரோவாக நடிக்கிறேன் என மார்க்கெட்டை இழந்த தமிழ் பிரபலங்கள்!. அட கொடுமையே!..

அதனை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார் நடிகர் பிரசாந்த் பெரும்பாலும் நடிகர் பிரசாந்த் நடித்த திரைப்படங்களில் ஆக்ஷன் திரைப்படங்கள் அவருக்கு பெரிதாக வெற்றியை பெற்று கொடுத்தது கிடையாது.

ஆனால் அவர் நடித்த காதல் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கின்றன. இருந்தாலும் ஒரு கட்டத்தில் ரஜினி விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வந்ததை பார்த்த பிரசாந்த் தானும் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க நினைத்தார் அப்படி அவர் ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ஜாம்பவான், தமிழ், ஜெய் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் பெரும் தோல்வியை கண்டன. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார் நடிகர் பிரசாந்த்.