தீயாய் பரவிய புகைப்படம் – நம்ப மறுத்த ரசிகர்கள்..! – நான் தான் என ஒப்புக்கொண்ட கௌசல்யா..!

நடிகை கௌசல்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் இடையில் திடீரென உடல் எடை கூடி காணப்பட்டீர்கள். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவின.

ஆனால் பலரும் அதனை நம்ப மறுத்தனர். குண்டாக இருப்பது போல பரவும் உங்களுடைய புகைப்படங்கள் உண்மையா..? இது நீங்கள்தானா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

ஆமாம் அந்த புகைப்படத்தில் இருப்பது நான்தான் என ஒப்புக்கொண்டார் நடிகை கௌசல்யா. தொடர்ந்து பேசிய அவர் ஒரு கட்டத்தில் எனக்கு உடலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டது.

மருத்துவர்களிடம் சென்றும் சரியான தீர்வு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், அதிகமாக சாப்பிடும் போது உடல் வலுவாக திடமாக இருப்பது போல உணர்ந்தேன். குளுக்கோஸ் கலந்த தண்ணீர் குடிப்பது. அதிகமாக சாப்பிடுவது. நன்றாக உறங்குவது. இவைதான் என்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என நம்பினேன்.

இதனால் அதிக அளவில் சாப்பிட்டேன். நிறைய நொறுக்கு தீனிகள் சாப்பிட்டேன். நான் பசியாக இருக்கும் பொழுது எனக்கு உடல் சோர்வாக இருக்கும். அப்படி இருக்கும் பொழுதெல்லாம் சாப்பிட வேண்டும் போல தோன்றியது.

இதனால் நாள் முழுதும் கிடைப்பதெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடிய பிறகு தான் எனக்கு என்னுடைய உடல் நலத்தின் அவசியம் எனக்குப் புரிந்தது.

எனவே நிறைய பேரிடம் ஆலோசனை கேட்டு நல்ல மருத்துவரை அணுகினேன். அவர் என்னுடைய முழு உடலையும் பரிசோதனை செய்துவிட்டு எனக்கு நரம்பு சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தார்.

அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு அதன் பிறகு அந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டேன். அதன் பிறகு உடல் எடையும் குறைத்து விட்டேன். தற்போது நலமுடன் இருக்கிறேன்.

இடையில் உடல் எடை கூடி குண்டாக இருந்த பொழுது நிறைய பட வாய்ப்புகள் தவற விட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு ஆறு ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து நான் ஒதுங்கி இருந்தேன் என கூறியிருக்கிறார் நடிகை கௌசல்யா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …