10th மார்க்.. அவமானப்படுத்திய பிரபல நடிகை… அழுது கொண்டே பல்லாவரம் வரை நடந்தே சென்ற பாலா..

வெட்டுக்கிளி பாலா என்று அழைக்கப்படக்கூடிய கேபிஒய் பாலா விஜய் டிவியின் மூலம் பிரபலமான நபர்களின் ஒருவராக மக்கள் மத்தியில் மாறியவர். இவர் 1995-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் நாள் பாலன் ஆகாஷ் என்ற இயற்பெயரோடு புதுச்சேரியில் பிறந்தவர்.

எளிய குடும்பத்தில் பிறந்த இவர் திரு.ஜெகநாதன் மற்றும் பூங்குழலி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர். இவருடன் பிறந்த ஓர் அண்ணனும் இருக்கிறார். கலியுக கர்ணனாக வர்ணிக்கப்படக்கூடிய இவர் பலருக்கும் பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறார்.

பத்தாம் வகுப்பு மார்க்..

கே பி ஒய் பாலா சிறு வயதிலேயே அனைவரையும் சிரிக்க வைப்பதில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். மேலும் பள்ளி பருவத்திலேயே பல மேடைகளில் ஏறி தனது பேச்சு திறமையை வெளிப்படுத்தி பல பரிசுகளை வென்றிருக்கிறார்.

பொதுவாகவே நன்றாக படிக்கக் கூடியவர்கள் திரைத்துறையில் ஜொலிக்க விரும்ப மாட்டார்கள். அதற்கு விதிவிலக்காக கேபிஓய் பாலா இருந்திருக்கிறார்.

இதற்கு காரணம் இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் சிறந்த மாணவர் என்ற அந்தஸ்தை பெற்றவர்.

ஆரம்ப நாட்களில் காரைக்காலில் நடந்த கோயில் திருவிழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த அமுதவாணனிடம் சென்ற பாலா நான் மிமிக்ரி எல்லாம் செய்வேன். என்னையும் உங்க டீமில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதற்காக அமுதவாணனிடம் மிமிக்ரி செய்து காட்டிய பின்பு பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு சென்னையில் தன்னை சந்திக்குமாறு வேண்டி இருக்கிறார்.

பத்தாம் வகுப்பு போலவே பன்னிரண்டாம் வகுப்பிலும் அதிக அளவு மதிப்பினை பெற்ற இவருக்கு படிப்பை விட மேடையில் கிடைத்த கைதட்டல்களும், பாராட்டுதல்களும் தான் பிடித்திருந்தது.

பெற்றோர்கள் இவரை டாக்டராக்கி விட வேண்டும் என்ற கனவில் இருந்தார்கள். எனினும் பாலாவோ படித்தால் சென்னை லயோலாவில் தான் படிப்பேன் என்று அடம் பிடித்து வந்தார்.

ஆனால் லயோலா கல்லூரியில் மாணவர்கள் கெத்தாக உடை அணிந்திருந்ததை பார்த்து தன்னுடைய தகுதிக்கு ஒத்து வராது. இங்கு இருந்தால் தன்னை கிண்டல் அடித்து கொன்றுவிடுவார்கள் என்று எண்ணி மீண்டும் காரைக்காலுக்கு திரும்பி சென்றார்.

பின்னர் இவர் அமுதவாணனின் நினைவு ஏற்பட வெறும் 130 ரூபாயை கொண்டு காரைக்காலில் இருந்து ரயில் டிக்கெட் எடுக்காமல் சென்னைக்கு வந்து அவர் வீட்டில் தங்கி இருந்து திரைப்பட வாய்ப்புகளை தேடினார்.

அவமானப்படுத்திய பிரபல நடிகை..

ஏவிஎம் ஸ்டுடியோவில் முதன்முதலாக வாய்ப்பினை தேடி சென்ற போது அங்கிருந்த பிரபலமான நடிகையுடன் பலரும் செல்ஃபி எடுக்க பாலாவும் செல்ஃபி எடுத்து அதனை தன் நண்பர்களுக்கு காட்டுவோம் என்று ஆசைப்பட்டு செல்ஃபி எடுக்க க்யூவில் நின்றார்.

இந்நிலையில் அந்த நடிகை கடைசியாக பாலா வர இரு இரு நீ யாரு என்று அதட்டலுடன் கேட்க எப்படி சொல்வது என்று தெரியாமல் தடுமாறிய பாலா அங்கு இருந்தவர்கள் முன்னிலையில் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றார்.

பல்லாவரம் வரை அழுத பாலா..

இதனை அடுத்து அங்கிருந்து தலைக்குனிந்தபடியே அழுத பாலா பல்லாவரம் வரை நடந்தே வந்திருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பிறகு பாலாவுக்கு செல்ஃபி எடுப்பது என்றாலே ஒரு விதமான பயமும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும்.

இதனை அடுத்து தான் விஜய் டிவியில் நடந்த கலக்கப்போவது யாரு ஆடிஷன் கலந்து கொள்ளுமாறு பாலாவுக்கு அமுதவாணன் வழிகாட்ட அவர் காட்டிய வழியில் அந்த ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார்.

அத்துடன் அந்த போட்டியில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் கலக்கப்போவது யாரு சீசன் 6 டைட்டில் வின்னர் ஆக மாறினார்.

இன்று கலியுக கர்ணனாகவும் அனைவருக்கும் தன்னால் இயன்றதை தரக்கூடிய வள்ளலாகவும் விளங்கக்கூடிய பாலாவின் வெற்றியை பொறுக்க முடியாத சிலர் அவரின் நிறம் மற்றும் முகத்தைப் பற்றி கேலியாக பேசியிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் வெற்றி பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

---- Advertisement ----

Check Also

ஒழுங்கீன நடவடிக்கை.. அரைகுறை ஆடையில் டெண்டுல்கர் மகளுடன் சுப்மன் கில் டேட்டிங்.. வெடித்த சர்ச்சை..!

இந்தியாவைப் பொறுத்த வரை ஹாக்கி தேசிய விளையாட்டு என்றாலும் கிரிக்கெட்டின் மேல் அதீத ஈடுபாடு கொண்ட இளைஞர் பட்டாளம் அதிகமாக …