பிரபல தெலுங்கு நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், ‘உப்பேனா’ திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில் ‘உப்பெனா’ புகழ் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு மகளாக இந்த படத்தில் நடித்திருந்தார்.தன்னுடைய 17 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.மங்களூரைச் சேர்ந்த கீர்த்தி ஷெட்டி, 2003 இல் கிருஷ்ண ஷெட்டி மற்றும் நீதி ஷெட்டி ஆகியோருக்குப் பிறந்தவர்.குழந்தை பருவத்திலிருந்தே, அவர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்தார் அவருடைய அழகு அதற்க்கு வழிவகை செய்தது.
மிக இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து, தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்து, தன்னுடைய அழகாலும், புன்னகையால் ரசிகர்களை வசீகரித்தார்.தற்போது, ’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் இயக்காமல் இருந்த இயக்குநர் லிங்குசாமி, தற்போது தமிழ், தெலுங்கில் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்பொத்தேனி நடிக்கும், இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி இணைந்திருக்கிறார்.இந்நிலையில், இவரது படு சூடான லிப்-லாக் காட்சி ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் 24-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தின் தீசர் தான் இது.
இதனை பார்த்த ரசிகர்கள், என்னமோன்னு நெனச்சோம்.. என்னமா கிளாமர் காட்டுது இந்த பொண்ணு என வாயை பிளந்து வருகிறார்கள் ரசிகர்கள்.