“குசேலன்” படத்தில் பசுபதி மகளாக நடித்த நடிகையா இது..? – தீயாய் பரவும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நடிகை சஃப்னா நிசாம் ( Safna Nizam ) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் அறிமுகமானார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர்கள் ரஜினிகாந்த், பசுபதி, மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான குசேலன் என்ற திரைப்படத்தில் நடிகர் பசுபதியின் மூத்த மகளாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குசேலன் திரைப்படமே இவருடைய முதலும் கடைசி தமிழ் திரைப்படமுமாக அமைந்துவிட்டது.

மலையாளத்தில் இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சோலோ என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது மலையாள சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் மணிமுத்து என்ற சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை சப்னா நிசாம்.

தன்னுடைய நீண்ட கால நண்பரும் காதலருமான சாஜின் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து தன்னுடைய கணவருடனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ரொமான்டிக் புகைப்படங்கள் என இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் …