படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் எங்க வச்சிக்கலாம் என கேட்டேன்.. ஆனால்.. குஷ்பூ கூறிய பகீர் தகவல்..!

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் எங்க வச்சிக்கலாம் என கேட்டேன்.. ஆனால்.. குஷ்பூ கூறிய பகீர் தகவல்..!

கண்ணும் இமையும் போல, பூவும் மணமும் போல, கடலும் அலையும் போல என்று கூறுவார்களே.. அதுபோல சினிமாவும் அட்ஜஸ்ட்மென்டும் போல.. என்று புதிய ஒரு உவமையை இணைத்துக் கொள்ளலாம் போல தெரிகிறது.

அந்த அளவுக்கு சினிமாவில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. தங்களுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக எத்தனையோ நடிகைகள் இப்படியான விஷயங்களை ஜீரணித்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையில் கவனம் செலுத்தி நகர்ந்து விட்டார்கள்.

ஆனால் தற்போது விரல் நுனியில் உலகம் இருக்கின்றது நமக்கு ஒரு அநியாயம் நடந்தால் அதனை கேட்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை சமூக வலைதளங்கள் மூலமாக நடிகைகளுக்கு எழுந்திருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக #MeToo என்ற ஒரு இயக்கம் பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த இயக்கத்தில் நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் தற்போது இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதற்கு காரணமாக அமைந்தது கேரளாவில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை தான். இந்த அறிக்கை தற்போது வரை முழுமையாக வெளியாகவில்லை.

ஒட்டுமொத்த அறிக்கையில் இருந்து ஒரு சில பக்கங்கள் மட்டும் கசிந்திருக்கின்றன. இப்படி கசிந்த பக்கங்கள் ஒட்டுமொத்த கேரளா நடிகர்கள் சங்கத்தியே கலைத்து விட்டு ஆளை விடுங்கடா சாமி என்று முன்னணி நடிகர்கள் எஸ்கேப் ஆகும் அளவுக்கு கொண்டு வந்து இழுத்து விட்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்படி என்றால் முழு அறிக்கையும் வெளியானால் என்னென்ன கூத்தெல்லாம் நடக்க இருக்கிறதோ..? என்று திரை உலக வட்டாரங்கள் அதிர்ந்து கிடக்கின்றன ரசிகர்கள் இந்த விவரங்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை குஷ்பூ சமீபத்தில் பேட்டி ஒன்றில், படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரத்தில் போது தயாரிப்பாளர் ஒருவரிடம் வந்து என்ன ஓ.கேவா என்று கேட்டார்.

அதற்கு நான் என்னுடைய செருப்பு சைஸ் 9.. இங்கே வைத்து அடிக்கவா..? அல்லது யூனிட்டில் வைத்து அடிக்கவா..? எங்கே வைத்துக் கொள்ளலாம்..? உங்களுடைய வசதி எப்படி..? என்று கேட்டு அவருக்கு பதில் கொடுத்து அனுப்பியதாக பதிவு செய்திருக்கிறார்.

குஷ்பூவுக்கு இருக்கும் இந்த தைரியம் அனைத்து நடிகைகளுக்கும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்தை பதிவு செய்து கொள்கின்றனர்.