என்னோட சைஸ் இது தான்.. எங்க வச்சி பண்ணட்டும்.. தயாரிப்பாளரிடம் கேட்ட குஷ்பூ..! என்ன காரணம் தெரியுமா..?

என்னோட சைஸ் இது தான்.. எங்க வச்சி பண்ணட்டும்.. தயாரிப்பாளரிடம் கேட்ட குஷ்பூ..! என்ன காரணம் தெரியுமா..?

என்னோட சைஸ் இதுதான் எங்க வச்சு பண்ணட்டும் தயாரிப்பாளரை கேட்டிருக்கிறார் நடிகை குஷ்பூ. இதனை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

என்னமோ ஏதோ என்று பதறி விடாதீர்கள். படப்பிடிப்பு தளத்தில் சிவனே என்று அமர்ந்து இருந்த நடிகை குஷ்புவிடம் என்ன ஓகேவா என்று ஜாடை மாடையாக படுக்கைக்கு அழைத்திருக்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

அழகு பதுமையாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை குஷ்பூவுக்கு இப்படி ஒரு அழைப்பு வந்ததை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

ஆனால், அதற்கு நடிகை குஷ்பூ என்ன பதில் கொடுத்தார் என்பதுதான் இங்கே ஹைலைட்டான விஷயம்.

சமீபத்தில் மலையாள சினிமாவில் நடைபெற்ற கூத்துகள் தான் இப்படியான விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவர காரணமாக இருக்கிறது. ஹேமா கமிட்டி அறிக்கை சில பக்கங்கள் இணையத்தில் லீக் ஆகிவிட ஒட்டுமொத்த கேரளா நடிகர் சங்கத்தியே கலைத்துவிட்டு ஓடும் அளவுக்கு ஒரு புயலை கிளப்பி விட்டு இருக்கிறது இந்த ஹேமா கமிட்டி அறிக்கை.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் இது போன்ற ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் தற்போது பலமாக எழுத தொடங்கி இருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்கு நடிகை குஷ்பூ தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, படப்பிடிப்பு தளம் ஒன்றில் நான் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் வந்து என்ன ஓகேவா என்று கேட்டார்.

அப்போது நான் என்னுடைய செருப்பு சைஸ் 9. இங்கே வைத்து அடிக்கவா..? அல்லது படக்குழுவில் எல்லோரும் முன்பும் யூனிட்டில் வைத்து அடிக்கவா..? என்று பதில் கொடுத்ததாகவும் இதனை கேட்டு நான் தயாரிப்பாளர் திரும்பி பார்க்காமல் சென்று விட்டார் என்றும் பதிவு செய்திருக்கிறார் நடிகை குஷ்பு.

இதனை அறிந்த ரசிகர்கள் எல்லா நடிகைகளும் தங்களுக்கு இப்படி அழைப்பு வரும்போது குஷ்பு போல செயல்பட்டால் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.