மாரடைப்பால் திடீர் மரணமா..? – நான் நல்லாத்தான் இருக்கேன் குத்து ரம்யா பதிவு..!

பிரபல நடிகை குத்து ரம்யா மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வைரலாகிய நிலையில் அதனை மறுத்திருக்கிறார் நடிகை குத்து ரம்யா.

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமான இவர் உண்மையான பெயர் திவ்யா ஸ்பந்தனா ஆகும்.

குத்து திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. மட்டுமில்லாமல் இவருடைய கதாபாத்திரத்தின் பெயரையே பலரும் இவருடைய பெயர் என்று நினைத்துக் கொண்டனர்.

எனவே தன்னுடைய பெயரை குத்து ரம்யா என்று சில படங்களில் பயன்படுத்திக் கொண்டார். தொடர்ந்து பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருந்தார் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து M.P.,-யாக பணியாற்றினார்.

சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக இவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாக பரவின.

பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர். நடிகை திவ்யா ஸ்பந்தனாவின் உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு திவ்யாவுக்கு என்ன ஆனது என்று கேள்விகளை எழுப்பி வந்திருக்கின்றனர்.

இதனால் அதர்ந்து போன நடிகை குத்து ரம்யா உடனடியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நான் நலமுடன் இருக்கிறேன் நான் இறந்து விட்டதாக கூறும் தகவல் போலியானது. தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் நாளை பெங்களூரு திரும்ப இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …