மீண்டும் குத்து ரம்யா.. – ரசிகர்களை ஷாக் ஆக்கிய படு சூடான கவர்ச்சி போட்டோஸ்..!

திவ்யா ஸ்பந்தனா ( Divya Spandana ) என்கிற குத்து ரம்யா ( Kuthu Ramya ) கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான குத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்பட 36 படங்களில் நடித்துள்ளார்.2016-ஆம் ஆண்டு வெளியான ‘நாகரஹாவு’ இவரது கடைசி படமாகும்.

இடையில் 2012-ஆம் ஆண்டு காங்கிரஸ் இளைஞரணியில் சேர்ந்த ரம்யா, தனது 31-ஆவது வயதில் மாண்டியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.அதனை தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டபோது தோல்வியடைந்தார்.

காங்கிரஸ் சமூக வலைதள தலைவராக தேசிய அளவில் செயல்பட்டுவந்த ரம்யா, இரண்டாண்டுகளாக மாண்டியா தொகுதி பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார்.இந்நிலையில், இவரும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலும் காதலிப்பதாகவும் துபாயில் நடக்க இருந்த இவர்கள் திருமணம் ரத்தாகி விட்டதாகவும் தகவல் வெளியானது.

பின்னர் திருமணம் ரத்தானதாக முரண்பட்ட செய்திகள் வந்தன.இதற்கு ரம்யாவின் தாய் ரஞ்சிதா விளக்கம் அளித்துள்ளார்.அது குறித்துப் பேட்டி அளித்த அவர்,’தற்போது ரம்யா திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை.

திருமணம் குறித்து ரம்யா முடிவு செய்தால் அதுபற்றி வெளிப்படையாக கூறுவோம்.அவருடைய திருமணத்தை மூடிமறைத்து ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ரம்யாவின் திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

ரம்யா அரசியலில் கவனம் செலுத்தியபோது, ரபேல் தனது தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் அவர்கள் அதிகமாக சந்திக்க நேரம் கிடைக்கவில்லை.மேலும் ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை.

ரபேலுக்கு போர்ச்சுக்கல் நாட்டை விட்டு வரவும் மனமில்லை. இதுபோன்ற காரணங்களினால் இரண்டுபேரும் பரஸ்பரம் பேசி பிரிந்துவிட்டனர் என்பது மட்டுமே உண்மை.இருப்பினும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

அவருடைய குடும்பத்தினரும், நாங்களும் தொடர்பில் தான் இருக்கிறோம்’என்கிறார் மம்மி ரஞ்சிதா.ஆனால் ரம்யாவோ சில வாரங்களாகவே முற்றிலும் தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருக்கிறார்.

இந்நிலையில், குத்து ரம்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.வயசானலும், இப்போவும் சின்ன பொண்ணு மாதிரி சிக்குன்னு தான் இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …