பொட்டுதுணி இல்லாமல் இருக்கும் காட்சியை படமாக்கிய “சமுத்திரம்” பட நடிகை..!

கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், நடிகை காவேரி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில், ‘காசி’, ‘புன்னகைப் பூவே’, ‘சமுத்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.

தற்போதும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் காவேரி நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் சில படங்களை இயக்கியிருக்கும் சூரியகிரண் என்ற இயக்குனரை திருமணம் செய்திருந்தார். அவர்கள் சமீபத்தில் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் காவேரி மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இது காதல் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சேத்தன்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சித்தி இட்னானி, சுகாசினி, ரோகித் முரளி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் பெயரிடப்படாத இந்தப் படத்தின் முதல் போஸ்டர், சமீபத்தில் வெளியிடப்பட்டது. கதாநாயகன் சேத்தன், நிர்வாணமாக அமர்ந்திருக்கும் அந்தக் காட்சி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மலையாள முன்னணி நடிகை காவேரி, தமிழில் காசி, கண்ணாடி பூக்கள், சமுத்திரம், கண்ணுக்குள் நிலவு, அப்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் இன்னும் தலைப்பு சூட்டப்படாத படம் ஒன்றை தமிழ், தெலுங்கு மொழியில் தயாரித்து இயக்கி வருகிறார்.

இதில் சேத்தன், சித்தி இத்னானி உள்பட பலர் நடிக்கின்றனர்.இந்தப் படத்துக்காக காவேரி, சேத்தன் நடித்த நிர்வாண காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறார். இக்காட்சியை படத்தின் போஸ்டராகவும் வெளியிட்டு இருக்கிறார்.

முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் நிர்வாண காட்சியில் நடித்திருந்தாலும் கூட, ஒரு பெண் இயக்குனர் நிர்வாண காட்சியை தமிழில் படமாக்கி இருப்பது இதுவே முதல்முறை என்று சொல்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …