இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அவர்களின் மகள் விஜய் ஆண்டனி என்ற காலை 3 மணி அளவில் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த தகவல் அதிகாலை முதலிலேயே இணைய பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. இசையமைப்பாளராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விஜய் ஆண்டனி அதனை தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில், இவருடைய மகளின் இறப்பு செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த லாரா நேற்று இரவு வழக்கம் போல தூக்க சென்றிருக்கிறார்.
நேற்று மாலை முதலே கடுமையான சோகத்துடன் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் லாராவின் அறைக்கு சென்று பார்த்த விஜய் ஆண்டனி மகள் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து பதறி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து மகளை மீட்டு அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் லாரா ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய அனுதாபங்களையும் ஆறுதல்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இவருடைய இந்த விபரீதம் முடிவுக்கு என்ன காரணம்..? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.
அவருடைய அறையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அறையில் உள்ள பொருட்கள் பொருட்களை தடையவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு அவரிடம் கடைசியாக பேசியது யார் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்ட வருகின்றது.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் லாரா கடந்த ஓராண்டாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் தற்போது தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். லாராவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் இடம் விசாரணை தொடங்கி இருக்கிறது. எதனால் இவர் தற்கொலை செய்து கொண்டார் விஷயங்கள் மருத்துவர் கூறிய பிறகும், பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த பிறகும் தான் தெளிவாக தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.
எனவே சிகிச்சை பார்த்து வந்த மருத்துவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருக்கின்றனர் என்று தெரிகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.