சாய் பல்லவியை முன்னணி நடிகருடன் ஒப்பிட்டு பேசிய பிரபல இயக்குனர்..! – யார் அந்த முன்னணி நடிகர்..!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் சாய் பல்லவி ( Sai Pallavi ). தெலுங்கு திரையுலகில் தான் தற்போது அவர் கவனம் செலுத்தி வருகிறார்.ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அதனாலேயே அவருக்கு சில பிரச்சனைகளும் ஏற்படுகிறது.அடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை இயக்கி உள்ளார். கதாநாயகி தேர்வு நடந்தது. தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சாய்பல்லவியை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாய்பல்லவிக்கு கதை பிடித்துள்ளதாகவும், எனவே இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு உள்ளது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.சர்வானந்த் தெலுங்கில் கதாநாயகனாக நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘ ஆட வால்லு மீகு ஜோஹார்லு ‘ . சர்வானந்த் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படம் மார்ச் மாதம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.சமீபத்தில் இந்த படத்திற்கான ப்ரி ரிலீஸ் இவெண்ட் பிரம்மாண்டமாக நடந்தது.மேடையில் ஒவ்வொரு நடிகையின் பெயரை சொல்லும் போதும் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர்.

ஆனால் சாய்பல்லவி யின் பெயரை சொன்னதும் அரங்கம் கூச்சல் நிற்காமல் சில நொடிகள் தொடர்ந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த மற்ற சிறப்பு விருந்தினர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

பல மேடைகளில் அஜித் பெயர் சொன்னதும் நிற்காமல் சத்தம் வருவது போல அது இருந்தது. கைதட்டல்கள் சத்தம் சற்று குறைந்தும் அதற்கு பிறகு தொடர்ந்து பேசிய புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் அவரை லேடி பவன் கல்யாண் என்று ஒப்பிட்டுப் பேசினார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …