பிரபல இளம் நடிகை லட்சுமிமேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது தமிழ் சினிமா குறித்து என்னுடைய பள்ளிக்காலத்தில் பெரிய யோசனை எதுவும் எனக்கு இருந்தது கிடையாது.
தமிழ் படங்களை பார்க்கவே மாட்டேன். அதற்குண்டான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. மற்றபடி தமிழ் சினிமா பார்க்கக்கூடாது என்ற என்னமெல்லாம் எனக்கு கிடையாது.
ஆனால் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை என்னுடைய வீட்டிலேயே நான்கு ஐந்து முறை பார்த்திருக்கிறேன்.
அந்தப் படத்தின் CDயை என்னுடைய வீட்டிற்கு தெரியாமல் பள்ளிக்கு எடுத்துச் சென்று இருக்கிறேன். இதனை பார்த்த என்னுடைய தோழிகள் பெருமையாக கொடுப்பேன்.
அதனை அவர்கள் வீட்டுக்கு வாங்கி செல்வார்கள் என்று பதிவு செய்தார். மேலும் போர்வையை போர்த்திக் கொண்டு என்னுடைய ஆண் நண்பருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பேன்.
வீடே இருளில் இருக்கும் நான் போர்வையை போற்றிக் கொண்டு செல்போனில் மெசேஜ் செய்யும் பொழுது செல்போனில் இருந்து வரும் வெளிச்சம் நான் செல்போனை நோண்டிக் கொண்டிருக்கிறேன் என்று என் அம்மாவுக்கு காட்டிக் கொடுத்து விட்டது.
அப்போது என் அம்மாவிடம் வசமாக சிக்கிக் கொண்டேன். வெளுத்து வாங்கி விட்டார் என பேசி இருக்கிறார் நடிகை லட்சுமி மேனன்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.