பிக்பாஸ் நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்..! கோடம்பாக்கம் கோலாகலம்..

பிக்பாஸ் நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்..! கோடம்பாக்கம் கோலாகலம்…

பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். முதல் படமே, அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.

இந்த படம்தான் நடிகர் பிரபு மகன் விக்ரம் பிரபுவுக்கும் முதல் படமாக இருந்தது. யானையை மையப்படுத்திய இந்த படம், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. குறிப்பாக படத்தின் பாடல்கள் அனைத்துமே செம ஹிட் ஆகின.

லட்சுமி மேனன்

மலையாளத்தில் லட்சுமிமேனன் அறிமுகமான படம் ரகுவிண்டே சுகந்தம் ரசியா என்ற இந்த படம் 2011ம் ஆண்டில் வெளியானது.

கும்கி படம் தமிழில் நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற நிலையில் அடுத்து சுந்தரபாண்டியன் படத்தில், சசிக்குமாருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்தார். இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

பஸ் பயணத்தில் ஏற்படும் காதல், சசிக்குமாரின் நண்பர் கூட்டம், அப்புக்குட்டி லட்சுமிமேனனை ஒன்சைடாக காதலிப்பது என இந்த படம் சுவாரசியாக இருந்தது. பாடல்களும் ரசிக்கும்படி இருந்ததால், லட்சுமி மேனனுக்கு இதுவும் ஒரு ஹிட் படமாக இருந்தது.

முன்னணி ஹீரோக்களுடன்…

அடுத்தடுத்து தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்தார். குட்டிப்புலி, நான் சிவப்பு மனிதன், பாண்டியநாடு, றெக்க என பல படங்களில் நடித்தார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக லட்சுமி மேனன் நடித்த கொம்பன் படம் பெரிய வெற்றியை பெற்றது. இதில் ராஜ்கிரண் மகளாக நல்ல கேரக்டரில் நடித்திருந்தார்.

கும்கி படத்துக்கு பிறகு மீண்டும் புலிக்குத்தி பாண்டியன் என்ற படத்தில், முத்தையா இயக்கத்தில் லட்சுமி மேனன் நடித்தார்.

இதில், கடைசியில் கணவர் விக்ரம் பிரபுவை கொன்ற வேல ராமமூர்த்தி உள்ளிட்ட வில்லன்களை லட்சுமிமேனன் பழிவாங்குவது போல எடுக்கப்பட்ட காட்சிகளால் படம் தோல்வியை தழுவியது.

ஆரிக்கு மனைவியாக…

இப்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற ஆரிக்கு மனைவியாக, ஒரு படத்தில் லட்சுமிமேனன் நடிக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக போதிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், இப்போது ஆரிக்கு ஜோடியாக நடிக்கிறார் லட்சுமி மேனன்.

இயக்குநர் ராஜசேகர பாண்டியன் இயக்கும் இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடந்தது. கோலாகலமாக நடந்த இந்த விழாவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

சசிக்குமார், கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். இன்று பிக்பாஸ் நடிகர் ஆரிக்கு மனைவியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.