விஷாலின் திருமணத்தை நிறுத்த லட்சுமி மேனன் செய்த வேலை..! – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

நடிகர் விஷால் திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்று போக நடிகை லட்சுமி மேனன் தான் காரணம் என்று பிரபல நடிகர் ஒருவர் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் விஷால் ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா ரெட்டி என்ற நடிகையும் மாடல் அழகியமான ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்காக இரு வீட்டார் சம்பந்தத்துடன் நிச்சயதார்த்தம் வரை சென்றார். நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார்.

தன்னுடைய திருமணம் குறித்து அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். இடையில் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இவர்களுடைய திருமணம் நின்று விட்டது என்பதை அவருடைய வருங்கால மனைவியாக இருந்த அனிஷா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இது எங்களுடைய தனிப்பட்ட இரண்டு குடும்பங்களின் முடிவு. எங்களுடைய தனி உரிமையை மதிப்பதற்கு நன்றி என ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் பலருக்கும் இது ஏமாற்றமாக இருந்தது. ஊரறிய தடபுடலாக நிச்சயதார்த்தம் செய்தாரே.. அவருடைய திருமண வாழ்க்கை இப்படியா அமைய வேண்டும் என்று உச்சு கொட்டினார்கள் பொதுவான சினிமா ரசிகர்கள்.

அந்த நேரம் பார்த்து, விஷால் குறித்து அனகொண்டா கதையை கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார் நடிகை ஸ்ரீரெட்டி. இதனால், ஸ்ரீரெட்டி தான் விஷாலின் திருமணம் நின்று போக காரணம் என ரசிகர்களின் கவனம் ஸ்ரீரெட்டி மீதும் திரும்பியது.

இந்நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் நடக்காமல் போனதற்கான காரணம் என்ன என்று பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, நடிகை லட்சுமி மேனன் தான் இதற்கு காரணம் எனவும் நடிகர் விஷாலை தீவிரமாக காதலித்து வந்த நடிகை லட்சுமி மேனன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவிலும் இருந்திருக்கின்றனர்.

ஆனால் நடிகர் விஷால் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற விவரம் தெரிந்ததும் அந்த பெண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை எல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு விரக்தியான அனிஷா ரெட்டி திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்து விட்டார். நடிகர் விஷால் திருமணம் நின்று போனதில் நடிகை லட்சுமி மேனனின் பங்கு மிகப்பெரியதுஎன பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …