முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்…! – மிரண்டு போன ரசிகர்கள்..!

லட்சுமி ராமகிருஷ்ணன் ( Lakshmi Ramakrishnan ) தமிழில் பிரிவோம் சந்திப்போம், ஈரம், சென்னையில் ஒருநாள், யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர். மலையாளப் படங்களிலும் நடித்துள்ள இவர், ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே போன்ற படங்களை இயக்கியுள்ளார்.திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

சில படங்களை டைரக்டும் செய்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். குறிப்பாக சொல்வதெல்லாம் உண்மை என்ற கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதுடன், சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

 

இதுதவிர படங்கள் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வரும் அவர், ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தையும் சமீபத்தில் இயக்கினார். இப்படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ‘ஆடுகளம்’ கிஷோர், ‘கோலி சோடா’ கிஷோர், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

 

இவரை, பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய் சேர்த்த சொல்வதெல்லாம் உண்மை  நிகழ்ச்சி சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனால் அவர் சில காலம் சின்னதிரையில்  தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்   ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற புதிய நிகழ்ச்சியில் தோன்றிவருகிறார்.

சமூக சிந்தனையும், பெண்களின் முன்னேற்றத்தையும் விரும்பும் அவர் 15 வருடங்களுக்கு சினிமாவிற்குள் வந்த இவர் தற்போதும் பல்வேறு நிகழ்சிகள் மூலம் லைம் லைட்டிலேயே உள்ளார்.

இந்நிலையில், தற்போது உடல் எடை குறைத்துள்ள இவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையிலான மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். மேலும், கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் இவரது புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …