வாட்சப்பில் பரவும் பிரபல சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன் ஆபாச புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல நடிகை லட்சுமி வாசுதேவன் சில இணைய ஏமாற்று பேர்வழிகள் மூலமாக ஏமாற்றப்பட்டு இருக்கிறார். இவருடைய தொலைபேசிக்கு பெரிய தொகை ஒன்றை பரிசாக விழுந்திருப்பதாக வந்திருந்த தகவலை நம்பிய இவருக்கு அது பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றது.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இவருடைய கைப்பேசிக்கு நீங்கள் ஐந்து லட்சம் ரூபாய் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இந்த லிங்கை கிளிக் செய்து உங்களுடைய பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு தகவல் வந்து இருக்கின்றது.

என்னதான் இருக்கிறது என்று அந்த லிங்கை கிளிக் செய்து பார்த்திருக்கிறார். அதன்பிறகு ஒரு தொலைபேசி தானாகவே செயலியை இன்ஸ்டால் செய்யும்படி கேட்டு இருக்கிறது. அதையும் செய்திருக்கிறார் நடிகை லட்சுமி வாசுதேவன்.

அடுத்த நிமிடமே இவருடைய தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு இருக்கின்றது. இவருடைய புகைப்படங்களை வைத்து மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்களை மாற்றிய நபர்கள் லட்சுமி வாசுதேவன் வாட்ஸ்அப் தொடர்பில் இருந்த அனைத்து தொலைபேசி எண்களும் அந்த புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார்கள்.

இதனால் அதிர்ந்து போன லட்சுமி வாசுதேவன் தான் பெரிய சிக்கலில் இருப்பதை உணர்ந்து இருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார். இப்படியான விஷயத்தால் நான் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டு இருக்கின்றேன்.

என்னுடைய புகைப்படத்தை மோசமான முறையில் மார்பிங் செய்து அதனை என்னுடைய நண்பர்களுக்கு குடும்பத்தினருக்கு அனுப்பியிருக்கிறார்கள். இது மிகவும் மோசமானது என்று கண்ணீர் மல்க அவர் வெளியே ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருவதுடன் இனிமேல் இதுபோன்ற பரிசு விழுந்திருக்கிறது அதை கிளிக் செய்யுங்கள் இதை கிளிக் செய்யுங்கள் என்று ஏதாவது மெசேஜ் வந்தால் அதனை தவிர்த்து விடுகிறோம் என்றும் அவருக்கு கூறி வருகிறார்கள்.

முக்கியமாக தங்களுக்கு தேவையான ஒரு செயலியை மட்டுமே நாம் பதிவிறக்கம் செய்து நம்முடைய கைப்பேசியில் பயன்படுத்த வேண்டும் ஆண்ட்ராய்ட் போன்கள் பயன்படுத்த கூடியவராக இருந்தால் பிளே ஸ்டோரில் இருக்கக்கூடிய ஆப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள் ஐபோன் பயன்படுத்துவராக இருந்தால் ஆப் ஸ்டோரில் இருக்கக்கூடிய செய்திகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

வேறு வேறு வகையான வேறு எந்த தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வது நம்முடைய பாதுகாப்பை கேள்விக்குறியாகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …