ஒரு வெப்சீரிஸ்-ல நடிக்கணும் வாங்க-ன்னு சொன்னாங்க.. நானும் போனேன்.. ஆனால்.. – லதா ராவ் பகீர் பேச்சு..!

பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகையான லதாராவ் சமீபத்தில் சுழலி என்ற வெப்சீரிஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, என்னுடைய குலதெய்வத்தை பூஜிப்பதற்காக நாங்கள் எங்கள் ஊருக்கு சென்றிருந்தோம். அப்பொழுது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

இது போன்ற ஒரு வெப் சீரிஸில் நடிக்க வேண்டும் சற்று கிளாமரான காட்சிகளும் இந்த உங்கள் கதாபாத்திரத்திற்கு இருக்கிறது என்று கூறினார்கள்.

நான் அப்போதே கூறிவிட்டேன். கிளாமரான கதாபாத்திரம் என்றால் கண்டிப்பாக நாம் நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.

இல்ல மேடம் நீங்க வாங்க.. பேசிக்கலாம் என்று கூறினார்கள். இல்லை சார் கிளாமராக நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நடிக்க முடியாது அப்படி என்றால் வந்து பேசுவது தேவையில்லாத வேலை என்று கூறினார்.

அப்போதும் கூட.. நீங்க வாங்க பேசிக்கலாம்.. டைரக்டர்கிட்ட பேசிக்கலாம் என்று கூறினார்கள். அதன் பிறகு சென்னை வந்தோம். சென்னை வரும் வரை என்னை தொடர்பு கொண்டு இருந்தார்கள்.

சரி வாங்க மேடம் உங்களுடைய கெட்டப் டெஸ்ட் மட்டும் செய்து கொள்ளலாம் என்று அழைத்தார்கள். நானும் போனேன், வெப் சீரிஸில் என்னுடைய கெட்டப் எப்படி இருக்குமோ அதை அப்படியே மேக்கப் செய்து காட்டினார்கள்.

இருந்தாலும் எனக்குள் ஒரு விஷயம் மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த கிளாமர் ரோல் இருக்கு என்று சொன்னீர்களே…? அது என்ன காட்சி என்று கேட்டேன். அவர்கள் சொல்லவே இல்லை அதன் பிறகு சில சில முறை திருப்பி திருப்பி கேட்டதற்கு பிறகு இயக்குனரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்கள்.

இயக்குனரிடம் போய் கேட்டேன் சார் எனக்கு எல்லாமே சொன்னார்கள் ஆனால் என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது அதனை தெளிவா நான் உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.

அது என்ன காட்சி என்று எனக்கு தெரிய வேண்டும் என்று கூறினேன். கவலைப்படாதீங்க மேடம்.. உங்களுக்கு சங்கடமில்லாமல் அந்த காட்சியை நாங்கள் படமாக்குகிறோம் என்று கூறினார்கள்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் வரை எனக்கு எந்த காட்சியில் நடிக்கப் போகிறோம் என்று தெரியாது.  ஆனால், நல்ல முறையில் இந்த காட்சியை படமாக்கினார்கள்.

நான் ஏன் வெப் சீரிஸ் என்றால் பயப்படுகிறேன் என்றால் வெப் சீரிஸ் என்றால் ஒரு வித பயம் எனக்கு வந்து விடுகிறது. என்னுடைய குழந்தைகளுடன் தமிழ் வெப்சீரிஸ் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதில் பேசக்கூடாத வார்த்தைகள் காட்ட கூடாத காட்சிகள் எல்லாம் இருந்தது வெப் சீரியஸ்க்கு சென்சார் என்ற ஒன்று கிடையாது. அதனால் இஷ்டத்துக்கு காட்சிகள் வைக்கிறார்கள்.

இனிமேல் குழந்தைகளுடன் அமர்ந்து வெப்சீரிஸ் பார்க்க கூடாது என்று இருந்தேன். இறுதியில் நானே வெப் சீரிஸில் நடிக்கிறேன் என்று சொல்லும் பொழுது எனக்கு அந்த பயம் இருந்தது.

எதுவும் மோசமாக நடித்துவிடக்கூடாது இத்தனை நாட்களாக நாம் எப்படி இருந்தோமோ.. அதே மாதிரி இருந்து விட்டு போய்விட வேண்டும் என்று எண்ணம் இருந்தது அதனால் தான் அப்படி கேட்டேன் என கூறியிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …