“வெள்ளை உடையில் வாக்கு செலுத்த வந்த நடிகர்கள்..” காரணம் இது தானாம்..!

தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்கள் எதைச் செய்தாலும், அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு சூழலுக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில், சமூக வலைதளங்களின் பாதிப்பு, அந்தளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந் நிலையில் என்ன மாதிரியான பிரச்சனைகளில், எப்படி கோர்த்து விடுவார்கள் என்றே தெரியாத அளவுக்கு, ரசிகர்கள் மத்தியில் சிக்க வைத்து விடுவார்களோ என்ற பயத்தில்தான் முன்னணி நடிகர்கள் பலரும் இருந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில்…

இதைத்தான் சொல்லவேண்டும், இதைத்தான் சொல்ல கூடாது என்று எந்த பாரபட்சமும் இன்றி, எல்லாவிதமான விஷயங்களையும் நடிகர்கள் நடிகைகளை முன்வைத்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் வந்து விடுவதால் அவை வைரலாகி விடுகின்றன.

ஒரு விதத்தில் நடிகர்கள், நடிகைகளின் மீது பலத்த விமர்சனங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அதனால் நடிகர் நடிகைகள் மத்தியில் ஒருவித அச்ச நிலையை, சமூக வலைதளங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன என்பது மறுக்க முடியாது.

--Advertisement--

மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது…

அதே நேரத்தில் சமூக வலைதளங்கள் மூலமாக தான் நடிகர், நடிகைகள் செய்யக்கூடிய நல்ல விஷயங்களும் மக்களின் பார்வைக்கு உடனுக்குடன் சென்று சேருகின்றன. எந்த இடத்திலும் நடிகர்கள் எந்த விதத்தில் நன்மைகள் செய்தாலும், அது உடனடியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும் சமூக வலைதளங்கள் தான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அதே வேளையில் யூடியூப் சேனல்களும், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை மூலமாக தான் ரசிகர்களிடம் மிக எளிதாக நடிகர்கள், நடிகைகள் விரைவில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்த கலரில் கட்சிக் கொடி?

சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு படத்தில், ஒரு காமெடி காட்சியில் ‘புதுசா அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்றால், அது பெரிய விஷயம் இல்லை. ஆனால், இனி எந்த கலரில் கட்சி கொடி அறிமுகப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை என்று அந்த நடிகர் சொல்வார்.

அவர் அப்படி சொல்லும் அளவுக்கு, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெருகிவிட்டன. கட்சி கொடிகளும் அதிகளவில் பெருகிவிட்டன. புதிதாக எந்த நிறத்தை வைத்து கட்சி கொடியை உருவாக்குவது என்று புலம்பும் அளவுக்கு தமிழ்நாட்டில் கட்சி கொடிகள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

வெள்ளை சட்டை அணிந்த நடிகர்கள்

இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு போட வந்த பல முக்கிய நடிகர்கள், குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சியான் விக்ரம் ஆகியோர் வெள்ளை சட்டை அணிந்து வந்து தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

எந்த கலரில் சட்டை போட்டிருந்தாலும்…

நடிகர்களில் பலரும் தேர்தல் ஓட்டுப் பதிவுக்கு வெள்ளை சட்டை அணிந்து வர காரணம் என்ன என்ற ஒரு கேள்வி எழுந்தபோது, வேறு எந்த கலரில் சட்டை போட்டு இருந்தாலும், இந்தக் கட்சிக்கு தான் அவர் சப்போர்ட் என்று இவர்களே முடிவு பண்ணி விடுவார்களே என்று சொல்லி இருப்பார்கள்.

நடுநிலையாளராக…

இப்படி ஒரு அபாய சூழ்நிலையில் இருப்பதால், முன்னணி நடிகர்களான அவர்கள், வெள்ளை சட்டை போட்டு வந்து, எந்த கட்சியும் சாராத நடுநிலையாளராக தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்

கடந்த முறை நடிகர் விஜய் சைக்கிளில் ஓட்டுப் போட வந்த போது அவர் ஓட்டி வந்த சைக்கிளில் ஒட்டியிருந்த நிறத்தை வைத்து, அவர் இந்த கட்சிக்கு ஆதரவாக தான் இப்படி சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார் என்றெல்லாம் கிளப்பி விட்டார்கள் என்பதை யாராலும் மறக்க முடியாது.

அதனால்தான், கலர் சட்டையில் வராமல் ரஜினி, விஜய், விக்ரம், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் நேற்று, வெள்ளை உடையில் வாக்கு செலுத்த வந்திருக்கின்றனர்.