இளம் நடிகை : சினிமாவில் அந்த நடிகர் டிப் டாப் என்று இருந்தாலும் கூட பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றாலும் கூட பெண்கள் சமாச்சாரத்தில் கொஞ்சம் வீக்கான ஆள் தான்.
இது தெரிந்து அவரிடம் நெருக்கமாக பழகக் கூடிய நடிகைகள் இருக்கிறார்கள். இவர் இப்படித்தான் என்று அட்ஜஸ்ட் செய்து கொண்டு அவருடைய படங்களில் காத்திருந்து நடிக்க கூடிய நடிகைகள் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த விஷயம் தெரியாத ஒரு நடிகை நடிகரை படப்பிடிப்பு தளத்திலேயே அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டு அதன் பிறகு தெறித்து ஓடிய கதை தான் இது.
படம் ஆரம்பிப்பதற்கு முன்பே போட்டோ சூட் என்று நடத்தி இருக்கிறார்கள். அந்த ஃபோட்டோ சூட்டிலேயே நடிகையை தொடக்கூடாத இடங்களில் தொட்டு விளையாடி இருக்கிறார் நடிகர்.
இந்த போட்டோ சூட்டின் போது பல கிளாமரான புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. நடிகையை வேண்டுமென்றே தொடக்கூடாத இடங்களில் தொட்டு போடக்கூடாத இடங்களில் கையை போட்டு தாராளமாக இருந்திருக்கிறார் நடிகர்.
இந்த நடிகர் வேண்டுமென்றே தான் இதை செய்கிறார் என்பதை புரிந்து கொண்ட நடிகை அவருடைய கையை தட்டி விட்டு இருக்கிறார்.
இது படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்திலேயே தன்னை அசிங்கப்படுத்திய நடிகை அப்போது எதுவும் சொல்லாமல் கூல் கூல் சிரித்துக் கொண்டே கடந்து விட்டார் நடிகர்.
ஆனால், படப்பிடிப்பு தொடங்கி இரண்டாவது நாள் காட்சி ஒன்றில் அந்த நடிகையை அடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட நடிகர் படப்பிடிப்பு தளத்திலேயே தன்னை அசிங்கப்படுத்திய காரணத்திற்காக அந்த காட்சியில் அடிப்பது போல் நடிக்காமல் நிஜமாகவே பளார் என அறைந்திருக்கிறார்.
இதனால் நடிகையின் கன்னம் சிவந்து வீங்கி போயிருக்கிறது. அழுதபடி கேரவேனுக்குள் ஓடிய நடிகை அப்படியே படப்பிடிப்பில் இருந்து தலை தெறித்து ஓடி இருக்கிறார்.
அதன் பிறகு அவசர அவசரமாக வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்து அந்த படத்தில் ஹீரோயின் ஆக்கினார்கள்.
அந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. ஹீரோயினை பளார் என்று நிஜாமவே அறைந்தும் நடிகரை கண்டிக்காமல் அவனையெல்லாம் அப்படியே போக விட்றனும் என தன்னுடைய படத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார் அந்த வின்னிங் இயக்குனர்.
நாளைடைவில் தன்னை அறைந்ததை மறந்துவிட்டு அதே நடிகருடன் அவருடைய தன்மை தெரிந்து கொண்டு அனைத்து அட்ஜெஸ்ட்மெண்ட்டுகளையும் செய்து கொண்டு அவருடன் ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்து விட்டார் அம்மணி.
எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டாரே என்று மாறி மாறி வியந்திருக்கிறார் விவரம் அறிந்த வட்டாரங்கள்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.