கேட்கவே காமெடியா இல்ல… நம்ம தளபதி விஜய்க்கு டப் காம்படிஷன் கொடுக்க விஜய் ஸ்டைலில் இருக்கிற தன் போட்டோவை பதிவு செய்த லெஜண்ட் சரவணன்!

சரவணா ஸ்டோர் உரிமையாளரான சரவணன்  தன் கடைக்கான ஆடை விளம்பரத்தில் இவரே அழகாக நடித்தார். ஆரம்பக் கட்டத்தில் இவர் அதைச் செய்தபோது அனைவரும் ஆச்சரியத்தோடு இது வியாபார உத்தி என்று நினைத்தனர். ஆனால் இது தான் அவர் சினிமாவுக்கு வர போட்ட பேஸ்மென்ட்.

 இதனையடுத்து இவர் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தை பல கோடி ரூபாய் செலவு செய்து எடுத்து அதில் ஹீரோ வாக நடித்தார். இந்த படம் பூஜை துவங்கிய நாளில் இருந்து வெளிவரும் நாள் வரை பலவிதமான விமர்சனங்களை சந்தித்தது. அதில் சில நெகடிவ் விமர்சனங்கள் ஆகவும் இருந்தது பல பாசிட்டிவ் விமர்சனங்களை ஆகவும் இருந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இவர் இவரது பாணியில் களம் காண வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார்.

 ஆனால் படம் வெளிவந்து சில நாட்களில் அட்டர் பிளாப் ஆனது. தற்போது அதையும் அவர் பொருட்படுத்தாமல் மற்றொரு படத்தை தயாரிக்கின்ற வேலையில் களமிறங்கியிருக்கிறார்.  மேலும் இவர் நேற்று செய்த செயல் அனைவரையும்  கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் மிகுந்த கடுப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

 இதற்கான காரணம் என்னவென்று பார்க்கும் போது நேற்று வாரிசு பட சூட்டிங்கிருந்து வாரிசு பட கதாநாயகி விஜயோடு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியே வந்தது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

 அதோடு அந்த புகைப்படம் செம வைரலாக பரவியது. அந்த புகைப்படத்தை க்கு போட்டியாக நமது தி லெஜண்ட் சரவணன் அதே பாணியில் அதே ஸ்டைலில் ஒரு போட்டோவை வெளியிட்டு விஜய் ரசிகர்களின் கடுப்பை சம்பாதித்துக் கொண்டார்.

 தற்போது அவரின் அந்த புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது இதைப் பார்த்து பலரும் பலவிதமாக பேசுகிறார்கள் கமெண்டுகளை பதிவு செய்கிறார்கள். சூடு போட்டதெல்லாம் புலி ஆகுமா?  அனைவரும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஆளை விடுடா சாமி.. படுக்கையில் புரட்டி எடுத்த ஹீரோ.. எகிறி ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக தென்பட்டு வருகிறார். …