லியோ ஆடியோ லாஞ்ச்..! – வெளியான தேதி..! – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கட்டுப்பாடுகள்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி குறித்த விபரங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வெளியாகி இருக்கின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இந்த ஆடியோ நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அதே நேரத்தில் அனைத்து பாடல்களும் அந்த தேதியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மறுபக்கம் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கக்கூடிய இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மொத்தம் 8000 பேர் கலந்து கொள்ள முடியும். எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 200 ரசிகர்கள் வீதம் மட்டுமே அரங்கினுள் அனுமதிக்கப்படுவார்கள்.

யார் அந்த 200 பேர் என்பதை அந்தந்த மாவட்ட செயலாளர்களே முடிவு செய்து கொள்ளலாம். மேலும் வரும் வழிகளில் பேனர் கட்டவுட் உள்ளிட்டவற்றை வைக்க முறையான அனுமதி பெற்று வைக்க வேண்டும்.

இல்லை என்றால் வைக்கவே கூடாது மற்றும் விழா நடக்கும் இடத்திற்கு மூன்று மணி நேரம் முன்பே அரங்கத்தில் இருக்க வேண்டும். தாமதமாக வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இதுவரை விஜய் ஆடியோ வெளியீட்டு விழாவில் எந்த விழாவிலும் இந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது கிடையாது. ஒரு மாவட்ட செயலாளர் 200 பேரை அழைத்து வருகிறார் என்றால் அந்த 200 பேருக்கும் அவர்தான் பொறுப்பு என்று அறிவித்திருக்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …