சம்பவம் செய்த நெல்சன், அட்லி – லோகி-யை நோக்கி தலையை ஸ்மூத்தாக திருப்பும் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய லியோ திரைப்படத்தின் மீது தற்பொழுது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது.

குறிப்பாக ஜெயிலர் மற்றும் ஜவான் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு லியோ படத்தின் மீதான பார்வையும், எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது.

சொல்லப்போனால் லியோ படத்தின் ரிலீஸ் ஃபீவர் இப்போதே பரவ தொடங்கி விட்டது. இந்த ஃபீவருக்கு மருந்தாக லியோ படம் இருக்குமா என்பது தான் இப்போது கேள்வியாக இருக்கிறது.

லியோ-வுக்கு பயம் காட்டிய ஜெயிலர், ஜவான்

இயக்குனர் நெல்சன் மற்றும் இயக்குனர் அட்லி இருவரும் தங்களை நிரூபித்து விட்டார்கள். தற்பொழுது தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்று இணைய பக்கங்களில் பலதரப்பட்ட ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கருத்து படங்கள் மூலமாகவும் கமெண்ட்கள் மூலமாகவும் தெரிவித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல லியோ திரைப்படமும் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர்கள் சிலரும் நடித்திருக்கிறார்கள் கன்னட சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர்களும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜெயிலர் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிடுகிடுவென உயர்த்தி இருக்கிறது.

மட்டுமில்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது மிகப்பெரிய ஒரு சுமையாக இந்த எதிர்பார்ப்பு மாறியிருக்கிறது என்றும் கூறலாம். லியோ திரைப்படம் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா..? லோகேஷ் தன்னை மீண்டும் நிரூபிப்பாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புஷ்பா 2-விற்கு பயம் காட்டிய KGF 2

முன்னதாக K.G.F : 2 படத்தின் அதிரி புதிரி வெற்றி காரணமாக புஷ்பா:2 படத்தில் நிறைய மாற்றங்களை செய்தார் இயக்குனர் சுகுமார். இதனை புரிந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளரும் பட்ஜெட்டை பற்றி கவலை படாதிங்க.. சொன்ன பட்ஜெட்டை விட டபுள் ஆனாலும் படம் உச்சகட்ட தரத்துடன் எந்த குறையும் இல்லாமல் வர வேண்டும் என பட்ஜெட்டை உயர்த்தி கொடுத்தார்.

இதனால், புஷ்பா : 2 படப்பிடிப்பு நாட்களை கூடுதல் ஆக்கியது படக்குழு, அல்லு அர்ஜுனும் அதிகப்படியான நாட்களுக்கு கூடுதல் சம்பளம் பெறாமல் பேசிய சம்பளத்துக்கு நடித்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், லியோ படத்தின் பணிகள் 90% முடிவடைந்து விட்ட நிலையில் படம் எப்படி வரப்போகிறது என்று வழி மேல் விழி வைத்து காத்திருகிறார்கள் ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …