இதனால் தான் லியோ படத்தில் ஹீரோவாக நடிக்க மறுத்தேன்..! – விஷால் ஓப்பன் டாக்..!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் 14 வயது இருக்கும் பொழுது எப்படி இருப்பாரோ அப்படி சில காட்சிகள் படத்தில இடம்பெற இருக்கிறது.

இதனை தத்ரூபமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் ஸ்டூடியோ ஒன்றில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த நடிகர் விஷால் எதனால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று காரணத்தை பதிவு செய்திருக்கிறார்.

மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஷால். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது லோகேஷ் லியோ படத்தின் கதையை கூறியதாகவும் இதற்காக நான்கு மாதங்கள் கால் சீட்டு வேண்டுமென்றும் கேட்டார்.

ஆனால், ஒரே நேரத்தில் என்னால் இரண்டு படங்களை நடிக்க முடியாது என்று லியோ படத்தில் நடிக்க முடியாது  என கூறிவிட்டேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் நடிக்கும் அளவுக்கு நான் பெரியதிறமைசாலி இல்லை. இதனால் தான் லியோ படத்தை நான் தவற விட்டேன் என கூறியிருக்கிறார்.

இதை அறிந்த பல ரசிகர்கள் தவிர்த்து விட்டு வேறு ஏதோ பிளாக்பஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருப்பது போல கதை விடுகிறார் என்று நடிகர் விஷாலின் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

நடிகர் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படமும் வெளியாக தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …