soft toys october october

“உங்கள் குழந்தைகள் விளையாடும் சாஃப்ட் டாய்ஸ்..!” – இப்படி சுத்தப்படுத்துங்க..!

குழந்தைகள் என்றாலே அவர்கள் பலவிதமான பொருட்களை வைத்து விளையாடுவார்கள். அந்த பொருட்கள் எளிது அழுக்காக மாறிவிடும். குறிப்பாக பஞ்சுகளால் செய்யப்பட்ட சாஃப்ட் டாய்ஸ் பயன்படுத்தும் போது சொல்லவே வேண்டாம்.குழந்தைகள் சாப்பிடும் போதும் தூங்கும்போதும் கட்டியணைத்து விளையாடும்  அந்த பொம்மைகள் அழுக்கேறி பார்ப்பதற்கே மிகவும் அவலசனமாக இருக்கும்.

soft toy

அப்படிப்பட்ட பொம்மைகளை சரியான முறையில் சுத்தப்படுத்தக்கூடிய சமயம் இதுதான். ஏனென்றால் சுட்டெரிக்கும் கோடை வெயில் அந்த பொம்மைகளை துவைத்து போட்டால் மிக எளிதில் காய வைத்து நமக்குத் தந்துவிடும்.

எனவே நீங்கள் கட்டாயம் இதை இந்த கோடையில் இதனை செய்து விடுவதின் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு சுகாதாரமான பொம்மைகளை நீங்கள் கொடுக்கலாம். அதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

soft toy

முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் சாஃப்ட் சாய்ஸை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கட்டாயமாக ஒரு ஜீப் இருக்கும் அப்படி ஜிப் இருக்கும் பட்சத்தில் அந்த ஜிப்பை ஓப்பன் செய்து அதுக்குள் இருக்கும் பஞ்சுகளை அப்படியே வெளியே எடுத்து ஒரு பையில் போட்டு கட்டி வைத்து விடுங்கள்.

பின்னர் பொம்மைகளின் துணி உறைகளை நீங்கள் எப்போதும் போல வாஷிங் மிஷினில் போட்டு துவைக்கக்கூடிய லிக்விடை ஊற்றி துவைப்பதற்கு முன்பு சில துளி டெட்டால் மற்றும் பெர்ஃப்யூம் சேர்த்து துவைத்து விடுங்கள்.

soft toy

பின்னர் இந்த பொம்மை உறைகளை உங்கள் வாஷிங் மெஷினில் டிரை மோடில் போட்டுவிட்டு பிறகு அதை எடுத்து நீங்கள் வெயிலில் உலர்த்தி விடுங்கள். காலை நேரத்தில் இதுபோல செய்தால் மாலை நேரத்தில் கட்டாயம் அடிக்கின்ற வெயிலில் நன்கு காய்ந்து உலர்ந்து நமக்கு கிடைத்து விடும்.

அப்படி உலர்ந்து விட்ட பிறகு நீங்கள் கட்டி வைத்திருக்கும் பஞ்சினை அதனுள் போட்டு ஜிப்பை மூடி விடுங்கள். இப்போது இந்த பொம்மையில் இருந்த அழுக்குகள் அனைத்தும் நீங்கி கம கம வாசத்தோடு புதிய பொம்மை போல காட்சி அளிக்கும்.

நீங்களும் எந்த முறையை பாலோ செய்து பாருங்கள் கட்டாயம் உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியடைவார்கள்.

--- Advertisement ---

Check Also

kids october october

“உங்க வீட்டு குழந்தைகளை.. ஈஸியா ஹேண்டில் பண்ண..!..” – ஈஸியான டிப்ஸ்..!

குழந்தைகளை ஈஸியா ஹேண்டில் பண்ண : கோடை விடுமுறை வந்தாலும் வந்தது பிள்ளைகளின் தொல்லை வீட்டில் பல மடங்காக அதிகரித்து …