weight loss october october

“உடல் எடை குறைய..!” – இந்த பழங்களை யூஸ் பண்ணுங்க..!

இன்று வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் உடல் எடை காரணமாக பல விதங்களிலும் உருவ கேலிக்கு உள்ளாக்கிறார்கள். அவர்கள் கட்டாயம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான உணவு முறைகளை கடைப்பிடித்து வருவார்கள்.

wg loss fruits

மேலும் உடல் எடையை குறைப்பதற்கு பழங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் ஒரு சில குறிப்பிட்ட பழங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கங்களோடு, ஒன்றாக நீங்கள் எடுத்துக் கொள்வதால் உங்கள் உடல் எடை விரைவில் குறையும்.

அப்படி எந்தெந்த பழங்களை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம் என்பதை பற்றிய விரிவான விளக்கத்தை இந்த கட்டுரையை படிப்பதின் மூலம் உங்களுக்கு தெளிவாக புரியும்.

wg loss fruits

தினமும் நீங்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதின் மூலம் வைட்டமின் சி சத்து நார்சத்து அதிகம் கிடைப்பதோடு உங்கள் உடல் எடையை குறைக்க கூடிய பணியை இந்தப் பழம் செய்துவிடும்.

 ஏனெனில் இந்த பழத்தில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதாலும் நார்ச்சத்து அதிக அளவு இருப்பதாலும் உடல் எடை எளிதில் குறைந்து விடும்.

wg loss fruits

கோடையில் அதிகமாக விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்றான தர்பூசணி பழத்தை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உடல் எடையை மிக விரைவில் குறைத்து விடலாம். இந்த பழத்திலும் கலோரி குறைவாகவே உள்ளது.

ஆப்பிள் பழத்தில் கலோரிகள் மிகக் குறைந்த அளவு உள்ளதோடு, நார்ச்சத்தும் அதிகளவு இருப்பதால் இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உடல் எடையை எளிதாக குறைத்து விடலாம்.

பப்பாளி பழம் உடல் எடையை குறைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இதிலும் கலோரிகள் குறைவாக இருப்பதாலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்வதாலும் நீங்கள் தினமும் ஒரு துண்டு பப்பாளி சாப்பிடுவதின் மூலம் உங்கள் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும்.

wg loss fruits

திராட்சை பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் எடை குறைப்புக்கும் பயன்படுகிறது. குறைந்த அளவு கலோரிகள் கொண்ட திராட்சையை உணவு உண்பதற்கு முன்பு நீங்கள் சாப்பிட்டு வந்தால் கட்டாயம் உடல் எடை குறையும்.

எனது மேற்கூறிய பழங்களை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் மிக விரைவில் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தை பெற முடியும்.

--- Advertisement ---

Check Also

kids october october

“உங்க வீட்டு குழந்தைகளை.. ஈஸியா ஹேண்டில் பண்ண..!..” – ஈஸியான டிப்ஸ்..!

குழந்தைகளை ஈஸியா ஹேண்டில் பண்ண : கோடை விடுமுறை வந்தாலும் வந்தது பிள்ளைகளின் தொல்லை வீட்டில் பல மடங்காக அதிகரித்து …