Connect with us

“முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் சில முக்கிய ஃபேஸ் பேக்..!” – நீங்களும் யூஸ் பண்ணலாம்..!

Face pack, Rose Paneer face pack, Turmaric cucumber face pack, ஃபேஸ் பேக், பன்னீர் ஃபேஸ் பேக், மஞ்சள் வெள்ளரி பேஸ் பேக், ரோஜா

Beauty Tips | அழகு குறிப்புகள்

“முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் சில முக்கிய ஃபேஸ் பேக்..!” – நீங்களும் யூஸ் பண்ணலாம்..!

என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா…  என்ற பாடல் வரிகள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அழகு என்பதை ஒவ்வொரு பெண்களும் விரும்புகிறார்கள். அதிலும் முக அழகை பராமரிப்பது அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை என்றுமே கைவிட்டதில்லை.

இவர்கள் 60 இலிருந்து 80 வரை முக அழகை பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட முக அழகை பேணுவதற்கு உரிய சில முக்கிய ஃபேஸ் பேக் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Face pack, Rose Paneer face pack, Turmaric cucumber face pack, ஃபேஸ் பேக், பன்னீர் ஃபேஸ் பேக், மஞ்சள் வெள்ளரி பேஸ் பேக், ரோஜா

முக அழகை பராமரிக்க உதவும் ஃபேஸ் பேக்

1.மஞ்சள், வெள்ளரி பேஸ் பேக்

Face pack, Rose Paneer face pack, Turmaric cucumber face pack, ஃபேஸ் பேக், பன்னீர் ஃபேஸ் பேக், மஞ்சள் வெள்ளரி பேஸ் பேக், ரோஜா

மருத்துவ குணம் நிறைந்திருக்கும் மஞ்சளில் அதிக அளவு ஆன்ட்டி செப்டிக் துகள்கள் உள்ளது. இது சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை பாதுகாக்க உதவி செய்கிறது. அது போல் வெள்ளரிக்காயும் மிகச்சிறந்த நீர்ச்சத்து கொண்ட ஒரு காய். இந்த நீர் சத்தானது உடலின் ஈரப்பதத்தை பேணுவதற்கு உதவி செய்கிறது. வெள்ளரிக்காயை அரைத்து அதனோடு சிறிதளவு மஞ்சளையும் சேர்த்து நீங்கள் பேஸ் பேக்காக போடுவதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய மாசு மருக்கள் நீங்கி வெண்மையாக பளிச்சென்று மாறிவிடுவீர்கள்.

2.கற்றாழை, வெள்ளரி பேஸ் பேக்

Face pack, Rose Paneer face pack, Turmaric cucumber face pack, ஃபேஸ் பேக், பன்னீர் ஃபேஸ் பேக், மஞ்சள் வெள்ளரி பேஸ் பேக், ரோஜா

அழகுக் கலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கற்றாழை ஜெல்லோடு வெள்ளரிக்காயின் சாறையும் கலந்து உங்கள் முகத்தில் போட்டு அரைமணி நேரம் அப்படியே உலர விட்டு விடுங்கள். அரை மணி நேரம் கழிந்த பிறகு நீங்கள் வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை கழுவி விடுங்கள். இதன் மூலம் சருமத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்கள் நீங்குவதோடு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளும் நீங்கும்.

3.ரோஜா, பன்னீர் ஃபேஸ் பேக்

Face pack, Rose Paneer face pack, Turmaric cucumber face pack, ஃபேஸ் பேக், பன்னீர் ஃபேஸ் பேக், மஞ்சள் வெள்ளரி பேஸ் பேக், ரோஜா

உலர்ந்த ரோஸ் இதழ்களை நன்கு அரைத்து அதில் பன்னீரை சேர்த்து குலைத்து பேஸ்ட் ஆக மாற்றி உங்கள் முகத்தில் அப்ளை செய்து விடுங்கள். முதல் நாள் இரவே இதை அப்ளை செய்து விட்டு மறுநாள் காலை குளிக்கும்போது குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவி விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்வதால் உங்கள் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் மாறிவிடும்.

மேற்கூறிய டிப்ஸை நீங்களும் ஃபாலோ செய்து உலக அழகியின் லிஸ்டில் இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள் கட்டாயம். உங்களுக்கும் ஒரு இடம் கிடைக்கும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top