Beauty Tips | அழகு குறிப்புகள்
“காதில் தோடு வெளிய வர மாதிரி ஓட்ட பெருசா இருக்கா..! – அப்ப இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி சரி பண்ணுங்க..!!
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் காதுகளில் தோடுகளை அடைவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் அதிக எடை உடைய தோட்டியினைப் போடுவதின் மூலம் சிறு வயதிலேயே காதில் இருக்கக்கூடிய அந்த ஓட்டை பெரிதாகி என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவார்கள்.
அப்படி காதில் ஓட்டை பெரிதாகிவிட்டால் அதை இயற்கையான முறையில் சரி செய்யக்கூடிய சில டிப்ஸை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து பயன்பெறலாம்.
காதில் தோடு அணியும் ஓட்டையை சிறிதாக்க டிப்ஸ்
டிப்ஸ் 1
காதில் நீங்கள் போடும் தோடு அந்த ஓட்டை வழியாக வெளியே வரக்கூடிய அளவிற்கு ஓட்டை பெரிதாக இருந்தால் அதை சரி செய்ய நீங்கள் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் விளக்கெண்ணை இரண்டையும் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இது ஒரு பேஸ்ட் பதத்துக்கு வந்த பிறகு அந்த பேஸ்ட்டை இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு உங்கள் காது ஓட்டைகளில் நன்கு அப்ளை செய்து விடுங்கள். இரவு முழுவதும் இந்த பேஸ்ட் ஆனது அப்படியே உங்கள் காதுகளில் இருக்கட்டும்.
மறுநாள் காலை எழுந்தவுடன் இதை கழுவி விடலாம். இதுபோல நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் காதுகளில் இருக்கக்கூடிய ஓட்டை சுருங்குவதை கண்கூடாக நீங்கள் பார்க்கலாம்.
டிப்ஸ் 2
தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு எண்ணெய்களையும் நன்கு கலக்கி விட்டு இரவு உறங்கச் செல்லும் முன் உங்கள் காதுகளில் ஓட்டைகளில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து விடவும். இப்படியே நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் காது ஓட்டைகளில் சுருக்கம் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டை மூடுவதை நீங்கள் பார்க்கலாம்.
மேற்கூறிய இந்த இரண்டு டிப்ஸ்யும் நீங்கள் ஃபாலோ செய்து வந்தால் கட்டாயம் உங்களது காது ஓட்டை பிரச்சனைக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. முடிந்தால் நீங்கள் இந்த இரண்டு முறைகளையும் ட்ரை செய்து பாருங்கள். ரிசல்ட் சூப்பராக இருக்கும் பட்சத்தில் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!