Beauty Tips | அழகு குறிப்புகள்
“என்னது.. முகத்தை சோப்பு போட்டு கழுவ கூடாதா..!” – இத்தன நாள் தெரியமா போச்சே..!
தினமும் நமது உடலில் இருக்கும் அழுக்கை நீக்குவதற்காகவும் உடல் அழகை பராமரிப்பதற்காகவும் சோப்பு கொண்டு நாம் உடலை சுத்தப்படுத்தி வருகிறோம். அப்படி நாம் பயன்படுத்துகின்ற சோப்பினை நாம் முகத்திற்கு பயன்படுத்துவதின் மூலம் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
முகத்தை சோப்பு போட்டு கழுவுவதால் ஏற்படும் பாதிப்புகள்
உடலில் மற்ற பகுதிகளை விட முகத்தில் இருக்கக்கூடிய தோல் மிகவும் மென்மையானது. எனவே நீங்கள் சோப்பை பயன்படுத்தி உங்க முகத்தை கழுவும் பொழுது முகத்தோலானது எரிச்சல் அடைவதற்கான வாய்ப்புகள் உருவாவதோடு வறண்ட சரும அமைப்பையும் தரும். எனவே முகத்திற்கு நீங்கள் சோப்பை பயன்படுத்தக் கூடாது.
முகத்தை தூய்மைப்படுத்துவதற்கு நீங்கள் கிளன்சர் தான் பயன்படுத்த வேண்டும். இதில் இருக்கக்கூடிய ஈரப்பதமானது உங்கள் சருமத்தை மென்மையாக்கவும், எண்ணெய் பசை அற்றதாகவும் வைத்துக்கொள்ள உதவி செய்யும்.
வேதி பொருட்கள் சேர்க்கையால் உருவாக்கப்பட்டிருக்கும் சோப்பினை கொண்டு உங்கள் முகத்தை கழுவும் போது தோல் அரிப்பு, தோல் எரிச்சல் போன்ற அலர்ஜிகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
சோப்பினை பயன்படுத்தும் போது சரும பிஹெசின் அளவை இது மாற்றியமைக்கும். அமிலத் தன்மை கொண்ட தோலில் பெரும்பாலான காரத்தன்மை கொண்ட சோப்பை தான் நாம் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் உங்கள் முக சருமம் வறண்டு மந்தமாக மாறிவிடும்.
எனவே முகத்திற்கு சோப்பு போடுவதை தவிர்த்து விட்டு நீங்கள் ஃபேஸ் வாஷ் ஏதேனும் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
சோப்பை பயன்படுத்தும் போது முகப்பரு, கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் மற்றும் சரும துளைகளில் அடைப்புகளை ஏற்படுத்த இது உதவுவதால் சோப்பின் பயன்பாட்டை முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.
நீங்கள் பயன்படுத்தக்கூடிய பேஸ்வாஸில் ஹைலூரோனிக் அமிலங்கள், கிளிசரின் மற்றும் நியாசினமைடு போன்ற பொருட்கள் உள்ளதா என்பதை கவனித்து வாங்கி பயன்படுத்துங்கள்.
அவ்வாறு நீங்கள் பயன்படுத்தும் போது சில சரும உபாதைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். மேற்கூறிய குறிப்புகளை மனதில் கொண்டு நீங்கள் நிச்சயமாக இனிமேல் சோப்பினை உங்கள் முகத்திற்கு பயன்படுத்த மாட்டீர்கள்.மேலும் கட்டாயம் தரமான ஒரு பேஸ்வாசை பயன்படுத்தி மேலும் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!