Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அழகு…அழகு முக அழகுக்கு இத செய்யுங்க.

face beauty

Beauty Tips | அழகு குறிப்புகள்

அழகு…அழகு முக அழகுக்கு இத செய்யுங்க.

face beautyமுகம் பளபளப்பாக எப்போதும் இருக்க வேண்டும் என்றால் தினமும் 3 முதல் 4 முறையாவது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அப்போது முகம் பொலிவாக  இருக்கும்.

தினமும் அரிசி கழுவிய கழுநீரில் நமது முகத்தைக் கழுவி வர முகத்தில் உள்ள அழுக்கு கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கும்.

முகம் அழகு பெற தினமும் பப்பாளிப் பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகம் பொலிவுடனும். பளப்பளப்பாகவும் இருக்கும். 

வாரத்துக்கு ஒரு முறையாவது முகத்திற்கு ஆவி பிடிப்பது மிகவும் நல்லது ஆவி பிடிப்பதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி ஒரு புத்துணர்வு பிறக்கும். இதன் மூலம் முகப்பொலிவு எளிதில் ஏற்படும்.

faceமுகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க முகத்தில் சிறிதளவு முட்டைகோஸ் சாறினை தேய்த்து அரை மணி நேரம் கழித்து முகத்தை  நீரில் கழுவுவதன் மூலம் விரைவில் முகச் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவடையும்.

பாலை தினமும் முகத்தில் தடவி சிலநேரம் மசாஜ் செய்தோம் என்றால் முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், முகம் மிகவும் மென்மையாகவும் இருக்கும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,  அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

face beauty

வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள்  தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து  வந்தால், முகம் பளிச்தான்.

கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி மற்றும் பூசணி போன்ற காய்கறிகளை சிறு துண்டு எடுத்து, மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும். பின்பு அவற்றுடன் கொஞ்சம் பயத்தமாவை கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முகம் சோர்வடையாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Beauty Tips | அழகு குறிப்புகள்

  • face face

    Beauty Tips | அழகு குறிப்புகள்

    சருமம் பொலிவுடன் இருக்க உதவும் வெண்ணெய்.

    By

      100 கிராம் வெண்ணெய்யில்  21 கிராம் மோனோ அன்சாச்சுரேட் 3 கிராம் பாலி அன்சாச்சுரேட் 51 கிராம் சாச்சுரேட்டட் கொழுப்பு...

  • tomoto tomoto

    Beauty Tips | அழகு குறிப்புகள்

    அழகுக் கலையில் தக்காளி.

    By

    தக்காளி சமையல் மட்டுமல்ல அழகு கலையிலும் மிகச் சிறப்பான பங்கினை வகிக்கிறது.மேலும் இதில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் சரும ஆரோக்கியம்...

  • bio bio

    Beauty Tips | அழகு குறிப்புகள்

    பயோ பெரி லிப் பாம்.

    By

    செயற்கை முறையில் வேதிப் பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்ற லிப் பாம் பயன்படுத்தும் போது எண்ணற்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அதனை...

Popular Articles

To Top