Beauty Tips | அழகு குறிப்புகள்
அடர்த்தியா.. நீளமா கூந்தல் வேண்டுமா? – அப்ப வெந்தய இஞ்சி ஹேர் பேக் போடுங்க..!
பொதுவாகவே அனைவருக்கும் கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும் இருந்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிப்பார்கள் என்ற எண்ணம் அதிகளவு நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் தங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க பல பொருட்களை அதிகளவு பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
அப்படி பயன்படுத்தியும் போதுமான ரிசல்ட் கிடைக்கவில்லை என்று கவலைப்படுபவர்கள் வெந்தைய இஞ்சி ஹேர் பேக் பயன்படுத்துவதன் மூலம் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர்வதோடு முடி உதிர்தல் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
வெந்தய இஞ்சி ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்
1.வெந்தயம் 50 கிராம்
2.இஞ்சி ஒரு துண்டு
3.தலைக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய்
இந்த ஹேர் பேக்கை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு முதல் நாள் இரவை உங்கள் தலைமுடிக்கு தேவையான தேங்காய் எண்ணெயை நன்கு தேய்த்து விட்டு உறங்கி விடுங்கள்.
பிறகு நீ மறுநாள் காலை நீங்கள் எழுந்து ஊற வைத்திருக்கும் வெந்தயத்தை நன்கு அரைத்துக் கொண்டு அதனோடு தோல் நீக்கிய இஞ்சி போட்டு மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் கலவையை நீங்கள் வெயில் நேரத்தில் போட்டு பிறகுதான் குளிக்க வேண்டும். இல்லையென்றால் இதன் குளிர்ச்சி தன்மை காரணமாக உங்களுக்கு சளி மற்றும் சைனஸ் பிராப்ளம் இருந்தால் பாதிப்புகள் ஏற்படலாம்.
எனவே முடிந்தவரை மதிய நேரத்தில் நீங்கள் குளிப்பதில் சிறந்தது. தற்போது அரைத்து வைத்திருக்கக்கூடிய இந்த ஹேர் பேக்கை அப்படியே உங்கள் முடியின் வேர்க்கால்களில் நன்கு படரும் படி தேய்த்து மசாஜ் செய்து விடவும்.
குறைந்தது ஒரு மணி நேரமாவது எந்த ஹேர் பேக் உங்கள் தலையில் இருப்பது காலச் சிறந்தது. இதனை அடுத்து ஒரு மணி நேரம் கழித்த பிறகு உங்கள் தலைமுடியை மிதமான ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான நீரில் நன்கு அலசி விடவும்.
நீங்கள் எப்படி மாதத்துக்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை செய்வதின் மூலம் உங்கள் கூந்தல் அடர்த்தியாக வளரும். அது மட்டுமல்லாமல் வெந்தயத்திற்கு கூந்தலுக்கு பளபளப்பு அளிக்கக்கூடிய தன்மை இருப்பதால் பட்டு போல உங்கள் கூந்தல் பறந்து பளபளப்பை வெளிப்படுத்தும்.
நீங்களும் இதனை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்த்து உங்களுக்கு ஏற்படும் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!