Connect with us

“பாட்டி சொன்ன சின்ன சின்ன அழகு குறிப்புகள்..!” – என்னென்ன தெரிந்து கொள்ளுங்கள்..!!

Beauty Tips, Coriander leaf Juice, Lemon juice, அழகு குறிப்புகள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சாறு

Beauty Tips | அழகு குறிப்புகள்

“பாட்டி சொன்ன சின்ன சின்ன அழகு குறிப்புகள்..!” – என்னென்ன தெரிந்து கொள்ளுங்கள்..!!

இன்று அழகுக்காக பெரும் அளவு பணத்தை இளைய தலைமுறை செலவு செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அழகு நிலையங்களுக்குச் செல்லவே ஒரு பட்ஜெட்டை போட்டு நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பெண்களும் செலவு செய்கிறார்கள் என்றால் அது ஆச்சரியத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் ஏற்படுத்தும்.

அந்த வரிசையில் நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற அல்லது நமக்கு கூறிச் சென்ற அழகு குறிப்புகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Beauty Tips, Coriander leaf Juice, Lemon juice, அழகு குறிப்புகள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சாறு

பாட்டி சொன்ன அழகு குறிப்புகள்

👍சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பட்டையை பொடி செய்து அதனோடு அரை டீஸ்பூன் அளவு தேனினை விட்டு பிறகு அதை நன்கு கலந்து உங்கள் சருமத்தில் தேய்த்து விடுங்கள். பிறகு இதனை குளிர்ந்த நீரால் கழுவும் போது உங்களது சருமம் மிருதுவாக மாறுவதோடு பளபளப்பையும் கொடுக்கும்.

இதையும் படிங்க :  "எப்படி வெயில் அடித்தால் என்ன? - இத ஃபாலோ பண்ணு சருமம் ஜொலி ஜொலிக்கும்..!!

👍நீங்கள் உடலுக்குப் போடும் சோப்பை தவிர்த்து விட்டு தயிர், பால் இவற்றில் ஏதேனும் ஓன்றில் கடலை மாவை நன்கு கலந்து உடலில் தேய்த்து குளிப்பதின் மூலம் உங்கள் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்குவதோடு சரும துளைகள் அடைத்து கொள்ளாமல் சருமத்திற்கு நன்மை கொடுக்கும்.

Beauty Tips, Coriander leaf Juice, Lemon juice, அழகு குறிப்புகள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சாறு

👍முகப்பருக்களை எளிய முறையில் நீக்க எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், சந்தன பவுடர் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து முகப்பரு இருக்கும் இடத்தில் தேய்த்து விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்வது மூலம் முகப்பரு வராமல் இருக்கும். அப்படி முகப்பரு வந்திருந்தால் அதை எளிதில் குணமாகி முகப்பரு இருந்த வடு தெரியாமல் இது மாற்றி விடும்.

இதையும் படிங்க :  "பொடுகு தொல்லையால் அவஸ்தையா..!" - இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பொடுகுக்குச் சொல்லுங்க பை பை..!!

Beauty Tips, Coriander leaf Juice, Lemon juice, அழகு குறிப்புகள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சாறு

👍முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் நீங்க கொத்தமல்லி இலை சாறு மற்றும் மஞ்சத்தூளை ஒன்றாக கலந்து உங்கள் முகத்தில் தேய்த்து விடுங்கள். இதனை தொடர்ந்து நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

உங்கள் சருமத்தில் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் எது இருந்தாலும் நீங்கள் குப்பைமேனி இலை சாறுடன் மஞ்சள் தூள் சேர்த்து தேய்த்து வருவதின் மூலம் உங்கள் சருமம், பளபளப்பாக மாறுவதோடு சரும பிரச்சனைகள் எளிதில் நீங்கும். மேலே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த குறிப்புக்களை நீங்களும் பயன்படுத்தி உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top