Connect with us

உதடு கருமை நீங்க – அசத்தாலனா வீட்டு வைத்தியம்..! – இதை ட்ரை பண்ணுங்க..!

For beauty lips, Remedies to get pink lips, Remove blacklish lip, உதடு அழகாக, உதடு கருப்பாக காரணம், உதடு கருமை நீங்க, உதட்டை சிவப்பாக மாற்றக்கூடிய எளிய டிப்ஸ்

Beauty Tips | அழகு குறிப்புகள்

உதடு கருமை நீங்க – அசத்தாலனா வீட்டு வைத்தியம்..! – இதை ட்ரை பண்ணுங்க..!

உதடு கருமை நீங்க : செயற்கையாக லிப்ஸ்டிக் போட்டு உதட்டை சிவப்பாக காட்டுவதை விட்டுவிட்டு இயற்கையான முறையில் உங்கள் உதட்டை சிவப்பாக மாற்றக்கூடிய எளிய டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

பொதுவாக உதடுகளில்  ஈரப்பதம் இல்லாமல் இருப்பதால் வறண்டு போவதோடு கருமை நிறமும் ஏற்படுகிறது. இதனால் சில உடல் நலக் குறைபாடுகள் கூட ஏற்படலாம். இதைத் தவிர்க்க இயற்கையான முறைகளை நீங்கள் ஃபாலோ செய்தால் போதுமானது.

உதட்டை சிவப்பாக மாற்ற இயற்கையான வழிகள்

கற்றாழை ஜெல்லை எடுத்து அதை உங்கள் உதடுகளில் அப்ளை செய்ய வேண்டும். குறைந்தது பத்து நிமிடம் முதல் 15 நிமிடங்கள் இதை உங்கள் உதடுகளில் நன்றாக தேய்த்து விட வேண்டும்.

பிறகு லிப்பாமை பயன்படுத்தி ஒருமுறை அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள். இதனைத் தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் உதட்டில் இருக்கும் கருப்பு மறைந்து சிவப்பாகும்.

மாதுளம் பழம் விதைகள் 10 இந்த விதைகளில் இருக்கக்கூடிய சாரை தனியாக பிழிந்து எடுத்துக்கொண்டு அதனோடு ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து உங்கள் உதடுகளில் அப்ளை செய்து விடுங்கள். குறைந்தது மூன்று நிமிடங்கள் ஆவது நீங்கள் இதை தேய்த்து விட்டு மசாஜ் செய்ய வேண்டும்.

 பிறகு குளிர்ந்த நீரில் உங்கள் உதட்டை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் உதடுகளில் இருக்கக்கூடிய கருமை நிறம் போய் சிவப்பாக மாறும்.

 பாதாம் எண்ணெயை உங்கள் உதடுகளில் தடவி வர கருமம் ஈரப்பதமாக மாறுவதோடு எதுக்கு தேவையான சிவப்பு விரைவில் கிடைக்கும்.

பீட்ரூட் சாறு சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனோடு சில சொட்டுக்கள் தேங்காய் எண்ணெயை சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து விடவும் இந்த கலவை திடநிலையை எட்டியவுடன் நீங்கள் சிறிது சிறிதாக எடுத்து உங்கள் உதட்டுக்கு உறங்குவதற்கு முன்பு பூசி விட வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் உதடு சிவப்பாக மாறும்.

 மேற்கூறிய இந்த வலிகளை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் எந்த ஒரு பக்க விளைவும் உங்கள் உதடுகளுக்கு ஏற்படாது. இந்த இயற்கை சிவப்பு டிப்ஸை ஃபாலோ செய்து ரிசல்ட்டை எங்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top