Connect with us

சாம்பார் வைக்கும் போது இதை பண்ணுங்க.. உடனே காலி ஆகிடும்..! – சூப்பர் டிப்ஸ் இதோ..!

Sambar, Sambar Tips, Tasty Sambar, சாம்பார், சாம்பார் டிப்ஸ், சுவையான சாம்பார்

Food Recipes | சமையல் குறிப்புகள்

சாம்பார் வைக்கும் போது இதை பண்ணுங்க.. உடனே காலி ஆகிடும்..! – சூப்பர் டிப்ஸ் இதோ..!

 வீட்டில் எவ்வளவுதான் முயன்று நல்ல முறையாக சாம்பார் வைத்தாலும் அந்த சாம்பாரை சாப்பிட அனைவரும் முகம்  சுளிக்கிறார்களா?  கவலை வேண்டாம். நீங்கள் வைக்கின்ற சாம்பார் இனி ருசியாகவும் சுவையோடும் இருப்பதற்காக சில டிப்ஸ்களை நாங்கள் கொடுக்கிறோம். அதை ஃபாலோ செய்தால் போதும் உங்களையும் சாம்பார் ராணி என்று அனைவரும் உங்களை மெச்சிக் கொள்வார்கள்.

 வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சாம்பாரை எப்படி செய்தால் சூப்பராக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

Sambar, Sambar Tips, Tasty Sambar, சாம்பார், சாம்பார் டிப்ஸ், சுவையான சாம்பார்

டிப்ஸ் 1

தினமும் துவரம் பருப்பை வைத்து நீங்கள் சாம்பார் வைக்கும் போது அதற்கு மாற்றாக நீங்கள் பாசிப்பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட வகைகளில் இருக்கும் பருப்புகளில் சாம்பார் வைக்கும் போது அது வித்தியாசமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் என்பதால் அதை அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

இதையும் படிங்க :  " வித்தியாசமான வரகரிசி தயிர் சாதம்..!" - சம்மருக்கு ஏற்ற ஹெல்தியான ரெசிபி..!

டிப்ஸ் 2

சாம்பாரில் போடும் காய்களை நீங்கள் அப்படியே சாம்பாரில் போடாமல் சிறிது எண்ணெயோ, நெய்யோ விட்டு வதக்கி போடும்போது சுவை கூடுதலாக இருக்கும்.

Sambar, Sambar Tips, Tasty Sambar, சாம்பார், சாம்பார் டிப்ஸ், சுவையான சாம்பார்

டிப்ஸ் 3

மேலும் சாம்பார் பொடியோடு சிறிதளவு  சட்னி கடலை, அரிசி இரண்டையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடித்து சாம்பாருடன் சேர்த்தால் சாம்பார் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

டிப்ஸ் 4

அதுபோல வெந்தயத்தை நீங்கள் தாளிக்கும் பொருளோடு சேர்த்து தாளிக்காமல் சிறிதளவு வறுத்து அந்த பொடியை சாம்பாரின் மீது தூவி விட்டால் குழம்பு கம கமவென்று மணக்கும். அதற்காக அதிக அளவு நீங்கள் இதை பயன்படுத்தினால் குழம்பில் கசப்பு தன்மை ஏற்பட்டுவிடும். எனவே அளவில் நிதானம் தேவை

இதையும் படிங்க :  "சுவையில் அசத்தும் பாரம்பரிய சோள குழிப்பணிகாரம்..!" - இப்படி செய்தால் ஒன்று கூட மிஞ்சாது..!

டிப்ஸ் 5

Sambar, Sambar Tips, Tasty Sambar, சாம்பார், சாம்பார் டிப்ஸ், சுவையான சாம்பார்

இந்த காய்கறிகளை போட்டு நீங்கள் சாம்பார் வைத்தாலும் சின்ன வெங்காயம் ஒரு ஐந்து எடுத்து அதை நன்கு நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி சாம்பாரில் கொட்டவும். இந்த மனம் உங்கள் வீட்டு நபர்களை சமையல் அறையை வரை அழைத்து வரும் என்று கூறலாம்.

டிப்ஸ் 6

 நீங்கள் எந்த வகையில் சாம்பார் வைத்தாலும் அதற்கு புளியை பயன்படுத்துவார்கள். புளிக்கு பதிலாக  நீங்கள் நெல்லிக்காயை கட் பண்ணி போட்டு சமைத்தால் கல்யாண சாம்பார் போல அந்த சாம்பார் இருக்கும். மேலும் சாம்பாருக்கு தேவையான புளிப்பை இது தந்துவிடும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top