Food Recipes | சமையல் குறிப்புகள்
“சுட.. சுட.. மொறு மொறுவென கம்பு தோசை..!” – எப்படி செய்வது என்று பார்க்கலாமா..!
பாரம்பரியமாக நமது முன்னோர்கள் செய்து சாப்பிட்ட கம்பு தோசை எண்ணற்ற சத்துகள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு இது உகந்ததாகும். கம்பினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதின் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது.
குறிப்பாக கோடை காலத்தில் இதை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உடல் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் உடல் வெப்பநிலையை சரி சமமாக இது பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் இந்த கம்பு தோசையை எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கம்பு தோசை செய்ய தேவையான பொருட்கள்
1.அரை கிலோ கம்பு
2.அரை கிலோ இட்லி அரிசி
3.உளுந்து 200 கிராம்
4.வெந்தயம் இரண்டு ஸ்பூன்
5.கல் உப்பு தேவையான அளவு
செய்முறை
👍முதலில் காய்ந்திருக்கும் கம்பினை நன்கு சுத்தப்படுத்தி நீரில் மூழ்குமாறு சுமார் 5 மணி நேரங்கள் ஊற விட வேண்டும். பிறகு எடுத்து வைத்திருக்கும் இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற விடுங்கள்.
👍 இந்த இரண்டையும் நன்றாக கழிந்து விட்டு மீண்டும் ஒரு மணி நேரம் ஊற விடவும். இப்போது உளுந்து பருப்பு. வெந்தயம் இரண்டையும் நன்றாக அலசி ஒரு மணி நேரம் ஊற விடுங்கள்.
👍 பின்னர் கம்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை கழிந்த எடுத்து கிரைண்டரில் போட்டு மையா அரைக்கவும். பின்னர் இதனுடைய இட்லி அரிசியையும் போட்டு அரைத்து விடுங்கள்.
👍 இட்லி அரிசியை போடும்போது வெந்தயத்தையும் போட்டு அரைக்கும் போது உங்கள் உங்களுக்கு தோசை மாவு மெது மெதுவென்று வரும் சமயத்தில் நல்ல மைய அரைத்து விடுங்கள்.
👍 இதனை அடுத்து தேவையான அளவு உப்பினை சேர்த்து ஐந்து முதல் ஆறு மணி நேரம் இந்த மாவினை புளிக்க விடவும். மாவு புளித்த பின் தோசை கல்லில் நீங்கள் தோசைகளை வார்த்து எடுக்கலாம்.
இந்த கம்பு தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி உகந்தது. குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய இந்த கம்பு தோசையை நீங்கள் கோடை காலத்தில் செய்து உங்கள் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளலாம்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!