Food Recipes | சமையல் குறிப்புகள்
“இட்லிக்கு செம காம்பினேஷன்..!” – கொங்கு நாட்டு தக்காளி குழம்பு..!!
கொங்கு தமிழ் பேசும் கொங்கு நாட்டில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்கின்ற தக்காளி குழம்பின் சுவை அலாதியாக இருக்கும். வேறு எந்த மாவட்டத்திலும் கோயம்புத்தூரில் செய்வது போல தக்காளி குழம்பு செய்ய மாட்டார்கள். ஒரு முறை இதன் சுவையை நீங்கள் உணர்ந்து கொண்டால் மீண்டும் மீண்டும் உங்கள் வீட்டில் இட்லிக்கு தக்காளி குழம்பு மட்டும்தான் வேண்டும் என கேட்பீர்கள்.
அந்த அளவு கூடுதல் சுவையோடு இருக்கும் கொங்கு நாட்டு தக்காளி குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
கொங்குநாடு தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
1 சின்ன வெங்காயம் உரித்தது 20
2.தேங்காய் துருவல் கால் கப்
3.வரமிளகாய் 3 4.கொத்தமல்லி இரண்டு டேபிள் ஸ்பூன்
5.சீரகம் அரை டேபிள் ஸ்பூன்
6.தக்காளி மூன்று 7.எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் 8.கருவேப்பிலை 9.கொத்தமல்லி 10.தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். இதனை அடுத்து எண்ணெய் சூடானதும் அதில் கொத்தமல்லி, சீரகம் வர மிளகாய் இவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இதனை அடுத்து எடுத்து வைத்திருக்கும் 20 சின்ன வெங்காயத்தை அதில் போட்டு பொன் நிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும். இப்போது இதனோடு நீங்கள் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொண்டால் வெங்காயம் எளிதில் வணங்கும்.
வெங்காயம் வணங்கிய பிறகு தக்காளியை துண்டு துண்டாக வெட்டி போட்டு அதையும் நன்கு இளக்கவும். தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கி விடுங்கள்.
பிறகு எந்த கலவையை எடுத்து ஒரு தட்டத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். இது சூடு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரையுங்கள். அப்படி அரைத்து முடித்தவுடன் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் துருவலையும் போட்டு மிக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது எந்த கலவையை மிக்ஸி ஜாரில் இருந்து எடுத்து நீங்கள் தாலிசம் செய்த வாணலியில் போட்டு தேவையான அளவு நீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இது ஒரு கொதி வந்தவுடன் தேவையான மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். இதனை அடுத்து கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
இப்போது சூடான சுவையான இட்லிக்கு செம காம்பினேஷன் ஆன கொங்கு நாட்டு தக்காளி குழம்பு தயார்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!