Food Recipes | சமையல் குறிப்புகள்
“மா லட்டு @ மாலாடு @ பொட்டுக்கடலை லட்டு..! ” – இப்படி செய்து சாப்பிடுங்க..!!
தென்னிந்திய இனிப்பு வகைகளில் பாரம்பரிய இனிப்பு பொருளாக இருப்பதுதான் இந்த மா லட்டு என்கிற மாலாடு. இந்த இனிப்பினை செய்வது மிகவும் ஈஸி.
அது மட்டுமல்ல இதில் இருக்கக்கூடிய ஆரோக்கியமான பலன்களை பார்க்கையில் குழந்தைகளுக்கு தேவையான புரதச்சத்தை கொடுப்பதில் இதற்கு நிகர் இதுதான் என்று கூறலாம். அப்படிப்பட்ட இந்த மா லட்டை செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மாலட்டு செய்யத் தேவையான பொருட்கள்
1.வறுகடலை அல்லது பொட்டுக்கடலை 250 கிராம்
2.சர்க்கரை 350 கிராம்
3.நெய் 100 மில்லி
4.முந்திரி பருப்பு 50 கிராம்
5.ஏலக்காய் 5
செய்முறை
முதலில் வறு கடலை அல்லது பொட்டுக்கடலை இதனை நீங்கள் லேசாக வெயிலில் உலர்த்திய பிறகு மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து நீங்கள் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையையும் அதேபோல் மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்து விடுங்கள்.
இதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஐந்து ஏலக்காய் மற்றும் பொடித்த சர்க்கரை பொடித்த வறு கடலை இவை அனைத்தையும் ஒன்றாக ஜாடியில் போட்டு மிக்ஸியில் நன்கு கலக்கும்படி மீண்டும் ஒரு முறை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
இதனை அடுத்து நீங்கள் இந்த கலவையை ஒரு பவுலில் மாற்றி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் வைத்திருக்கும் நெய்யை நன்கு உருக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் நீங்கள் வைத்திருக்கும் முந்திரி பருப்பை சிறு சிறு துண்டுகளாக உடைத்து இதில் போட்டு நெய்யையும் உருக்கி, உருக்கி ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து விடுங்கள்.
இப்போது உடலுக்கு சக்தியினை அளிக்கக்கூடிய மா லாடு தயார். இது உங்கள் வீட்டு பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் எடுத்துக் கொள்ளக்கூடிய சுவையான இனிப்பு பண்டமாகும். எளிதில் ஜீரணமாக கூடிய இந்த இனிப்பு பண்டத்தை உங்கள் வீட்டில் செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து அசத்துங்கள்.