Food Recipes | சமையல் குறிப்புகள்
“சப்பாத்திக்கு சூப்பரான சைடிஸ் மீல் மேக்கர் கிரேவி..!” – இனிமே இப்படி செய்யுங்க..!!
இன்று பொதுவாகவே இரவு நேரத்தில் வீடுகளில் டிபன் சப்பாத்தி ஆகத்தான் இருக்கிறது. இந்த சப்பாத்திக்கு அடிக்கடி தக்காளி குருமாவை வைத்தும் வெஜிடபிள் குருமாவை சாப்பிட்டும் போர் அடித்து இருக்கக்கூடியவர்கள் வித்தியாசமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு சரியான சாய்ஸ் இந்த மீல் மேக்கர் கிரேவி என்று கூறலாம்.
மிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய எந்த மேல் மேக்கர் கிரேவியை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம் இதனால் அவர்களுக்கு சர்க்கரை ரத்தத்தில் கட்டுக்குள் இருக்கும்.
மீல் மேக்கர் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள்
1.மீல் மேக்கர் 50 கிராம்
2.பெரிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது ஒன்று
3.சின்ன வெங்காயம் 20 4.வரமிளகாய் 3
5.பட்டை ஒரு துண்டு 6.தக்காளி மூன்று
7.கிராம்பு இரண்டு
8.பூண்டு 20 பல்
9.இஞ்சி ஒரு துண்டு 10.துருவிய தேங்காய் கால் கப்
11.உப்பு
தாளிக்க
12.எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
13.கடுகு சிறிதளவு
14.கரம் மசாலா சிறிதளவு 15.கருவேப்பிலை ஒரு கொத்து
16.கொத்தமல்லி
செய்முறை
முதலில் நீங்கள் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம் தக்காளி வரமிளகாய் இவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து எண்ணெய் சூடான பின் இந்த பொருட்களை போட்டு நன்கு வதக்கவும்.
இது லேசாக வதங்கியதும் பூண்டு, கிராம்பு போன்றவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு இந்த கலவையை ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதன்பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மீல் மேக்கரை நன்றாக கழுவி அதை நீரில் போட்டு வேகும் வரை கொதிக்க விடவும். அது கொதித்து நன்கு வெந்த பிறகு லேசாக உப்பினை போட்டுவிட்டு அந்த மீல் மேக்கரை இருக்கக்கூடிய நீரினை பிழிந்து விட்டு தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது வதக்கி வைத்திருக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மைய அரைத்து எடுங்கள். இதனோடு அரை கப் தேங்காயையும் சேர்த்து அரைத்து விடுங்கள்.
இந்த கலவையை அப்படியே வைத்துக்கொண்டு அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றி அதில் கடுகு, பட்டை போன்றவற்றை போட்டு தாளிசம் செய்யவும். இதனோடு வெட்டி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
இது நன்கு வதங்கிய பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலாவை போட்டு மீண்டும் வதக்கவும். இனி இதோடு மீல் மேக்கரை போட்டு கலந்து கிளறி விடவும்.
இந்தக் கலவை நன்கு கலந்த பிறகு நீங்கள் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இதனோடு போட்டு இலக்கி விட்டு தேவையான அளவு நீரை விட்டு கொதிக்க விடவும்.
இது இரண்டு கொதி வந்த நிலையில் உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு நீங்கள் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை மேலே தூவி விடுங்கள். இப்போது சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் தயார்.