Food Recipes | சமையல் குறிப்புகள்
“மணக்க மணக்க மொச்சைக்கொட்டை குழம்பு..!” – விரும்பிய படி சாப்பிட இப்படி செய்யுங்க..!
பருப்பு சாம்பார், வறுத்தரைத்த சாம்பார், மிளகு அரைத்த குழம்பு, புளிக்குழம்பு, வத்தக்குழம்பு என்று பல்வேறு வகையான குழம்புகளை மதிய நேரத்தில் சாப்பிட்டு போர் அடித்தால் நீங்கள் கட்டாயம் மொச்சைக்கொட்டை குழம்பு செய்து சாப்பிட்டால் உங்கள் மனது ஒரு ஃபுல் பில் நிலையை அடையும்.
இப்படிப்பட்ட அருமையான சுவையான மொச்சைக்கொட்டை குழம்பை எப்படி செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மொச்சைக்கொட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
1.மொச்சை 100 கிராம்
2.மல்லி ஒரு டீஸ்பூன்
3.கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
4.உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
5.பச்சரிசி ஒரு டீஸ்பூன்
6.கசகசா ஒரு டீஸ்பூன்
7.சோம்பு ஒரு டீஸ்பூன்
8.சீரகம் ஒரு டீஸ்பூன்
9.மிளகு அரை டீஸ்பூன்
10.பட்டை இரண்டு
11.கிராம்பு மூன்று
12.ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம்,
13.கருவேப்பிலை
14.சின்ன வெங்காயம்
15.தேங்காய் துருவல்
16.தக்காளி,
17.மிளகாய் தூள்
18.புளி
19.கடுகு
20.பூண்டு
21.தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் மொச்சை பச்சையாக இருந்தால் அப்படியே உறித்து எடுத்து வேகப் போட்டுக் கொள்ளலாம். அப்படி இல்லாமல் உலர்ந்த முத்தையாக இருந்தால் அது முதல் நாளில் நீங்கள் ஊறவைத்து பின் மறுநாள் அதை நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் எடுத்து வைத்திருக்கும் புளியை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சின்ன வெங்காயம், மல்லி கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு, பச்சரிசி கசகசா, சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு வெந்தயம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பிறகு இதனை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து ஒரு கடாயை எடுத்து வைத்து அதில் சிறிதளவு எண்ணெயை விட்டு வேக வைத்திருக்கும் மொச்சையை போடவும். அதனோடு நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கி பின் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது தேவையான அளவு உப்பையும் நீங்கள் போட்டுக் கொள்ளலாம்.
இதனை அடுத்து நீங்கள் புளி கரைசலை சேர்த்துக் கொள்ளுங்கள். புளி கரைசலின் பச்சை வாசம் நீங்கும் வரை வேகவிட்டு பிறகு அரைத்து வைத்திருக்கக் கூடிய அந்த கலவையை சேர்த்து கிளறி விடுங்கள்.
பச்சை வாசம் நீங்கும் வரை நன்கு கொதிக்கும் வரை இந்த கலவையானது அடுப்பில் இருக்கட்டும். இப்போது பச்சை வாசனை நீங்கி குழம்பு நன்கு கொதித்து வாசம் வரும் பக்குவத்தில் கருவேப்பிலை கொத்தமல்லியை கிள்ளி போடுங்கள் சுவையான மொச்சைக்கொட்டை குழம்பு தயார்.