Food Recipes | சமையல் குறிப்புகள்
“ஈஸியா டேஸ்ட்டியான மட்டன் குழம்பு..!” – எப்படி செய்யுங்க..!!
மனம் கேக்குதே ஒன் மோர் என்று சொல்வதற்கு ஏற்ப நீங்கள் உங்கள் வீட்டில் வித்தியாசமான இந்த மட்டன் குழம்பை செய்து கொடுத்தால் இன்னும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று அனைவரும் கேட்க கேட்கக்கூடிய அளவு உங்கள் குழம்பு படு டேஸ்டாக இருப்பதோடு மிகவும் ஈசியாக இதை செய்து முடித்து விடலாம்.
இப்படிப்பட்ட மட்டன் குழம்பை எப்படி வைப்பது என்பதை பற்றி விரிவான விளக்கத்தை இந்த கட்டுரையில் நீங்கள் படிக்கலாம்.
மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
1.மட்டன் அரை கிலோ
2.பட்டை சிறிதளவு
3.மிளகு ஒரு டீஸ்பூன்
4.வெங்காயம் நான்கு நறுக்கியது
5.பச்சை மிளகாய் 10
6.தக்காளி நான்கு
7.மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்
8.தனியாத்தூள் அரை டீஸ்பூன்
9.மட்டன் மசாலா நான்கு தேக்கரண்டி
10.தயிர் தேவையான அளவு
11.புதினா
12.கொத்தமல்லி
13.உப்பு போன்றவை தேவையான அளவு
செய்முறை
முதலில் நீங்கள் வாங்கி வந்திருக்கும் மட்டனை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து ஒரு பாத்திரத்தை நீங்கள் அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும். அது லேசாக சூடான உடன் அது தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு இதில் நீங்கள் வைத்திருக்கும் பட்டை, மிளகு போன்றவற்றை போட்டு தாளித்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை போட்டு நன்கு வதக்கவும்.
இவை நன்கு வதங்கிய பிறகு வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டையும் போட்டு நன்கு வதங்கும் வரை நன்கு வதக்கவும். இதனைத் தொடர்ந்து நீங்கள் மட்டனை போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் இதை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மட்டன் மசாலா தூள், தனியா தூள், தயிர், உப்பு இவற்றை சேர்த்து நன்கு கொதிக்கும் வரை பாத்திரத்தை மூடி கறியை வேகும் வரை வேக விடவும்.
கறி நன்கு வெந்த பிறகு இதோடு புதினா, கொத்தமல்லி சேர்த்து இறக்கி பரிமாறலாம். வித்தியாசமான சுவையில் ஈசியாக செய்யக்கூடிய இந்த மட்டன் குழம்பினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!