Food Recipes | சமையல் குறிப்புகள்
“இட்லிக்கு தொட்டு சாப்பிட யம்மி யம்மி சுவையில் ரோட்டு கடை தக்காளி குழம்பு..!” – எப்படி வைப்பது என்று பார்க்கலாமா?
பொதுவாகவே காலை நேரத்தில் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இட்லி ஒரு அற்புதமான உணவாக உள்ளது. ஆவியில் வேக வைத்து எடுக்கும் இந்த உணவை உண்பதால் எந்தவிதமான கோளாறுகளும் உடலுக்கும் வயிற்றுக்கும் ஏற்படுவதில்லை. அப்படிப்பட்ட எந்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி என்று பல வகையான சட்னிகளையும், சாம்பார்களையும் நாம் பயன்படுத்தி வீடுகளில் சாப்பிட்டு இருப்போம்.
எனினும் ரோட்டு கடையில் வைக்கக்கூடிய அளவு சுவையான தக்காளி குழம்பை சைடு டிஷ் ஆக தொட்டு சாப்பிடும் போது கூடுதலாக இரண்டு இட்லிகளை சாப்பிடலாம் என்ற எண்ணம் தோன்றும்.
அந்த ரோட்டு கடையில் வைக்கக்கூடிய அந்த தக்காளி குழம்பினை எப்படி செய்வது என்று இப்போது இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ரோட்டு கடை தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
1,சின்ன வெங்காயம் 100 கிராம்
2.தக்காளி பொடி பொடியாக நறுக்கியது
3.மூன்று வரமிளகாய் இரண்டு
4.பச்சை மிளகாய் 4
தாளிக்க
5.தேவையான அளவு எண்ணெய்
6.கடுகு
7.உளுத்தம் பருப்பு
8.கடலைப்பருப்பு
9.கருவேப்பிலை
10.பெருஞ்சீரகம் @ சோம்பு
செய்முறை
முதலில் சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதைப்போலவே தக்காளியையும் நீளவாக்கில் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இதனை அடுத்து அடுப்பில் ஒரு வானொலியை வைத்து போதுமான அளவு எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, கடலைப்பருப்பு ஆசிரியவற்றை போட்டு வெடிக்க விடவும்.
இவை வெடித்த பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும், நன்கு வதங்கி வரக்கூடிய நிலையில் உப்பு மற்றும் நீங்கள் வெட்டி வைத்திருக்கும் பச்சை மிளகாய், வரமிளகாயை போடவும்.
இதனை அடுத்து இது நன்கு வதங்கிவிட்ட பின் நீங்கள் அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவிலேயே ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதை தேவையான நீரில் கரைத்து வதங்கிக் கொண்டிருக்கும் வாணலியில் ஊற்றி விடவும்.
இப்போது சுவைக்கு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் பொடியை போட வேண்டும். இந்த சாம்பார் நன்கு கொதித்த பின் இறக்கி விடலாம். இதனை அடுத்து இதன் மேல் கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலையை தூவி விடுங்கள்.
இப்போது சூடான சுவையான இட்லிக்கு தொட்டுக்கொள்ள ரோட்டு கடை தக்காளி குழம்பு ரெடி.