Connect with us

“அட ஆரஞ்சு பழத்துல இவ்வளவு நன்மைகளா? ” – இனி வேண்டாமுனு சொல்லாம சாப்பிடுங்க..!

Benifits of Orange, orange, Orange Juice, ஆரஞ்சு ஜூஸ், ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நன்மைகள், ஆரஞ்சு பழம்

Health | உடல்நலம்

“அட ஆரஞ்சு பழத்துல இவ்வளவு நன்மைகளா? ” – இனி வேண்டாமுனு சொல்லாம சாப்பிடுங்க..!

சிட்ரிக் வகையைச் சேர்ந்த ஒரு அருமையான சுவை நிறைந்த பழம் தான் ஆரஞ்சு. இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டு இருப்பதால் அனைவரும் விரும்பக்கூடிய பழங்களின் வருகையில் இதுவும் ஒன்றாக இணைந்துள்ளது.

மேலும் இது ஆரஞ்சு பழ சீசன் என்பதால் இந்த பழத்தின் விலை சற்று மலிவாக கிடைக்கிறது. எனினும் நீங்கள் அனைவரும் அந்த பழத்தை விரும்பி உண்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும்.

Benifits of Orange, orange, Orange Juice, ஆரஞ்சு ஜூஸ், ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நன்மைகள், ஆரஞ்சு பழம்

அப்படிப்பட்ட ஆரஞ்சு பழத்தில் இருக்கக்கூடிய அபரிமிதமான நன்மைகள் என்னென்ன என்பது பற்றி விளக்கமாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நன்மைகள்

ஆரஞ்சு பழம் நமது உடலில் உள்ள நீர் சத்தை பாதுகாக்க உதவக்கூடிய வகையில் நீர் ஏற்றத்தை தரக்கூடிய பழம் என்று கூட கூறலாம். உங்கள் உடலில் இருக்கும் நீர்சத்தை அதிகரிக்க இந்த பழம் உதவுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள இதில் இருக்கும் வைட்டமின் சி பெருமளவில் உதவி செய்கிறது.

இதையும் படிங்க :  "நாவல் பழம் -மா..!" - இத சாப்பிட்டா இவ்வளவு நன்மைகளா?

Benifits of Orange, orange, Orange Juice, ஆரஞ்சு ஜூஸ், ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நன்மைகள், ஆரஞ்சு பழம்

சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் படைத்த இந்த ஆரஞ்சு பழம் 100 கிராம் அளவு பழம் இருந்தால் அதில் 53.2 கிராம் அளவு வைட்டமின் பி சத்து உள்ளது.

ஆரஞ்சு பழம் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய சக்தி கொண்டது. அது மட்டுமல்லாமல் பெக்டின் என்ற நார்ச்சத்தை அதிகமாக கொண்டுள்ளது. இது இருக்கக்கூடிய பொட்டாசிய சத்தானது இதயச்சுவர்களில் ஏற்படக்கூடிய தடிமனை தவிர்க்க உதவுவதால் இதயத்தை  பாதுகாக்கிறது.

வெயில் காலத்தில் உருவாகும் தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய பணியை ஆரஞ்சு செய்கிறது. மேலும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரஞ்சு முழு துணையாக உள்ளது. கண்களில் இருக்கும் ரத்த நாளங்களுக்கு வலிமை சேர்க்கிறது.

Benifits of Orange, orange, Orange Juice, ஆரஞ்சு ஜூஸ், ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நன்மைகள், ஆரஞ்சு பழம்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கருதுபவர்கள் பூஜ்ஜிய கலோரி கொண்ட பழங்களில் ஒன்றான  ஆரஞ்சை சேர்த்துக் கொள்வதின் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புகளை எரித்து உங்கள் உடல் எடையை குறைத்து விடலாம்.

இதையும் படிங்க :  தேர்வு சமயம் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் பற்றி பார்ப்போமா?

முதலில் செரிமான சக்தியை அதிகரித்து பசியை தூண்டுவதோடு குடலில் புண்களை ஆற்றக்கூடிய தன்மை எந்த ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது. மேலும் ரத்த சோகை உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் ரத்தத்தில் ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரித்துக் கொடுக்கும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த ஆரஞ்சு சாறை அதிக அளவு கொடுப்பதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம், கண் பார்வை மேம்படும்.

Benifits of Orange, orange, Orange Juice, ஆரஞ்சு ஜூஸ், ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நன்மைகள், ஆரஞ்சு பழம்

சிறுநீரகக் கோளாறை சரி செய்வதோடு உடல் சூட்டை குறைத்து பல் வலியை நீக்கும். இது மூல வியாதிக்கும் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஆரஞ்சு பழம் சாறினை நீங்கள் ரெகுலராக குடித்து வருவதன் மூலம் சிறுநீர் எரிச்சல் ஏற்படாது.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் உதவி செய்கிறது. மேலும் இது சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், கந்தகம் போன்ற சத்துக்கள் இருப்பதால் மூட்டு சம்பந்தபலிகளுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடியது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top