Health | உடல்நலம்
“உடல் எடை அதிகம் ஆகணுமா..!” – அப்ப வாழைப்பழத்தை இப்படி சாப்பிடுங்க..!!
பார்ப்பதற்கு உடல் நோஞ்சான் போல இருக்கக்கூடியவர்கள் உடல் எடையை அதிகரிக்க பல வகைகளில் முயற்சி செய்து வருகிறார்கள். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் வேளையில் அதற்கு நேர் மாறாக உடல் எடை கூடி பூசினது போல் உள்ள தோற்றம் பெற வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள்.
அப்படி புசுபுசுவென்று குண்டாக நினைப்பவர்கள் வாழைப்பழத்தை இது போல செய்து சாப்பிடுவதின் மூலம் நீங்கள் மிக விரைவில் உங்கள் உடல் எடையை கூட்டிக் கொள்ள முடியும்.
உடல் எடையை கூட்ட வாழைப்பழத்தை சாப்பிடும் முறை
தினமும் வாழைப்பழத்தோடு பாதாம் பருப்பும் சேர்த்து நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் எடை மிக அதிக அளவு கூடும்.வீட்டில் பிறை ஊற்றி வைத்திருக்கும் தயிரோடு வாழைப்பழத்தை கலந்து சாப்பிட்டு வந்தாலும் உங்கள் உடல் எடை அதிகரிப்பதோடு மேனியும் பளபளப்பாக மாறும்.
வெண்ணையோடு வாழைப்பழத்தை சேர்த்து உண்டு வாருங்கள். கட்டாயம் உடல் எடை அதிகரித்து பழைய குஷ்பூவை போல குண்டான மேனியை பெறுவீர்கள்.
மாம்பழ ஜூஸ் போடும்போது அதோடு ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து அடித்து தினமும் குடித்து வந்தால் உங்களைப் போல் குண்டான உடல்வாகு யாருக்கும் அமையாது. அந்த அளவுக்கு உடல் எடையை அதிகரிக்க கூடிய தன்மை இவை இரண்டுக்கும் உள்ளது.
வாழைப்பழத்தை பாலில் சேர்த்து மில்க் ஷேக் ஆக அடித்து அதனுடன் உலர் பழங்களை போட்டு நீங்கள் குடிப்பதின் மூலம் உங்கள் உடல் எடையை விரைவாக அதிகரிக்க முடியும். இல்லையென்றால் நீங்கள் பாலுடன் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது.
வாழைப்பழத்தை நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சாப்பிட்டு வர உங்களுக்கு அது பல நன்மைகளை செய்து உடல் எடை கூட்ட உதவி செய்யும். மேலும் உடலில் இருக்கக்கூடிய தசைகளுக்கு உடனடியான ஆற்றலை கொடுக்கக் கூடிய அபார சக்தி படைத்தது தான் இந்த வாழைப்பழம்.
உங்கள் உடல் நிலையை ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவர்கள் தயவு செய்து மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பிறகு மேற்கூறிய டிப்ஸை ஃபாலோ செய்வது நலம் தரும்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!