Health | உடல்நலம்
சர்க்கரை நோயாளிகள் கோடையில் இளநீர் குடிக்கலாமா? இதற்கான விடையை பார்ப்போமா?
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் என்று அழைக்கப்படுபவர்கள். இந்தக் கோடையில் மற்ற குளிர்பானங்களை பருகி தங்களது சருமத்தை மட்டுமல்லாமல் நா வறட்சியை தடுக்க குளுக்கோஸ் அதிக அளவு இருக்கக்கூடிய இளநீரை குடித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு எகிரி விடுமா? என்ற எண்ணத்தில் பலரும் இளநீரை குடிப்பதை தவிர்த்து வருகிறார்கள்.
இயற்கையாகவே இந்த இளநீரில் சர்க்கரை சத்து இருப்பதால் இந்த பயம் ஏற்படுகிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியத்தை தரக்கூடிய எந்த இளநீரை குடிப்பதினால் அதுவும் அளவோடு குடிப்பதால் எண்ணற்ற பயன்களைப் பெற முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.
இளநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
👍சர்க்கரை நோயாளிகள் வாரத்துக்கு இரண்டு அல்லது வாரத்திற்கு ஒருமுறை இளநீரை குடிப்பதின் மூலம் அவர்களது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கிறது.
👍சிறுநீரக கற்களால் ஏற்படக்கூடிய பாதிப்பை இது தடுத்து நிறுத்துகிறது மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இதய சம்பந்தமான வியாதிகள் ஏற்படுவதற்கு அதிக சாத்தியக்கூறு இருப்பதால் அவர்கள் இளநீரை குடிப்பதின் மூலம் இதய நோய்களிலிருந்து பாதுகாக்க அருமையான பொட்டாசிய சத்துக்களை கொண்டிருக்கக் கூடிய இந்த இளநீர் உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை இது சரி செய்கிறது.
👍உடலில் தேவையில்லாமல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி விடுவதால் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க இது உதவுகிறது.
👍 இயற்கையான மாய்ஸ்ரைசிங் என்று இதனை கூறலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இளநீர் குடிப்பதினால் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
எனவே இந்த கோடையில் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள நீங்கள் வாரம் ஒரு முறை இளநீரை பருகி வருவதில் தவறேதும் இல்லை.
எனவே இனி நீரழிவு நோயாளிகள் பயத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் நீங்கள் இளநீரை விரும்பி குடிக்கலாம். இது மற்ற பழ ரச பானங்களை பருகுதல் பருகுவதை விட இது உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை அள்ளி தரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!