Connect with us

மைதா மாவு எதிலிருந்து கிடைக்கிறது..! – குலைநடுங்க வைக்கும் உண்மை தகவல்கள்..!

maida benefits, maida made from, மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது, மைதா நன்மைகள்

Health | உடல்நலம்

மைதா மாவு எதிலிருந்து கிடைக்கிறது..! – குலைநடுங்க வைக்கும் உண்மை தகவல்கள்..!

நாம் விரும்பி சாப்பிடக்கூடிய பல வகையான உணவுப் பொருட்களில் மைதா மாவு-ன் பங்கு அளப்பரிய அளவில் சேர்ந்திருக்கிறது. இனிப்பு வகைளாகட்டும், கார வகைகளாகட்டும் அதில் மைதாவின் பங்கு பிரதானமாக இருக்கிறது.

இந்தியர்களின் பலரது விருப்பமான இரவு நேர உணவாக இருக்கக்கூடியது பரோட்டா என்று சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.ஆனால், இந்த பரோட்டா முழுக்க முழுக்க 100% மைதாவால் செய்யப்படுகிறது.

இப்படி நம்முடைய வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது..? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.மட்டுமில்லாமல் அவ்வப்போது மைதா மாவு குறித்த தகவல்கள் இணையத்தில் வைரல் ஆவதையும், மைதா மாவு உடல் நலத்திற்கு தீங்கானது மற்றும் அதனை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் வரும் என்பது போன்ற தகவல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள்.

மைதா எதிலிருந்து கிடைக்கிறது

ஆனால், உண்மை என்ன..? என்பதை இங்கே தெளிவாக விரிவாக பார்ப்போம்.முதலில் மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று பார்ப்போம்.மைதா மாவு கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் கோதுமையில் இருந்து கோதுமை மாவு மற்றும் கோதுமை ரவை ஆகியவற்றை தயாரித்த பிறகு மீதி இருக்கக்கூடிய சக்கையில் இருந்து தான் இந்த மைதா மாவு தயாரிக்கப்படுகிறது.

maida benefits, maida made from, மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது, மைதா நன்மைகள்

இந்த மைதா மாவில் புரோட்டின், அமினோ அமிலம், நார்ச்சத்து, இரும்புச்சத்து என எந்த ஒரு சத்தும் கிடையாது. இதில் முழுக்க முழுக்க ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை மட்டுமே இருக்கிறது.கோதுமையில் உள்ள ஸ்டார்ச் தனியாக பிரிக்கப்பட்டு மைதா மாவு தயாரிக்கப்படுகிறது.

கோதுமை மாவு ஒரு விதமான பழுப்பு கலரில் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இந்த மைதா மாவு ஏன் வெண்மையாக இருக்கிறது..? என்று யாரேனும் யோசித்தது உண்டா..? ஏனென்றால், மைதா மாவில் பென்சோயில் பெராக்ஸைட் என்ற ஒரு வேதிப்பொருள் கலந்து வெண்மையாக்கப்படுகிறது.

பென்சொயில் வேதிப்பொருள்

இந்த பென்சோயில் பெராக்ஸைட் என்பது ஒரு வேதிப்பொருள். இதை தலைக்கு அடிக்கக்கூடிய டை, கழிவறை சுத்தம் செய்யக்கூடிய பினாயில் மற்றும் உடைகளை சுத்தம் செய்யக்கூடிய ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சோப்பு பவுடரில் பயன்படுத்திகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு வேதிப்பொருளை கலந்த மாவை உணவாக எடுத்துக் கொண்டால் எப்படியான பிரச்சினைகள் வரும் என்பதை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா..?இந்த பென்சொயில் பெராக்சைட் சாப்பிடக்கூடிய பொருளில் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய், அல்சர் மற்றும் ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் வரும்.

maida benefits, maida made from, மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது, மைதா நன்மைகள்

குறிப்பாக இளம் வயதினரை காட்டிலும் 40 அல்லது 50 வயதை கடந்த நபர்கள் மைதாவால் செய்த உணவுகளை சாப்பிடும் பொழுது அவர்களுக்கு அது செரிக்காது.பல்வேறு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிறுவர்கள் அல்லது வாலிபர்கள் இந்த மைதாவால் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடும் பொழுது அவர்களுக்கு செரித்து விடும்.

இதையும் படிங்க :  "நாவல் பழம் -மா..!" - இத சாப்பிட்டா இவ்வளவு நன்மைகளா?

ஆனால், அதனை தொடர்ந்து சாப்பிடும் போது உடலுக்குள் அவர்களுடைய செரிமான மண்டலம் வலுவிழந்து கொண்டே வரும் என்பது தான் உண்மை.இதை விட கொடுமையான ஒரு விஷயம் என்றால் என்னவென்றால் மைதா மாவில் கலக்கப்படக்கூடிய இந்த பென்சோயில் பெராக்ஸைட்.. ஏற்கனவே மைதாவில் இருக்கக்கூடிய ஸ்டார்ச் உடன் சேர்ந்து Alloxon என்ற ஒரு வேதிப்பொருள் உருவாகிறது.இதனை ஆய்வகங்களில் மிக முக்கிய ஒரு பொருளாக பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக மனிதர்களுக்கு சர்க்கரை நோய் என்று சொல்லப்படக்கூடிய நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியமான காரணமே இந்த Alloxon தான்.

நீரிவுக்கு முக்கிய காரணம்..

இந்த வேதிப்பொருள் மைதாவில் அதிகமாக இருக்கிறது.இது மனித உடலில் இருக்கும் க்ளுக்கோஸ் அளவை சீராக இயங்க விடாமல் குழப்பும் வேலையை செய்கிறது.
மட்டுமில்லாமல், மைதா மாவு சுவையாகவும், நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக செயற்கையான நிறமூட்டிகள் இன்ன பிற ரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது.இந்த மைதா மாவில் உடலுக்கு தேவையான எந்த சத்துக்களும் இல்லை. இவை முற்றிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒரு பொருள்.

maida benefits, maida made from, மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது, மைதா நன்மைகள்

இந்த மைதா மாவை ஆரம்பத்தில் பசைகளை தயாரிக்க பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க மைதா மாவை உணவாகவும் பயன்படுத்த தொடங்கி விட்டோம்.இவை மேலை நாடுகளில் ஆள் பர்பஸ் ஃபிளார் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இதன் மூலம் கேக் செய்யலாம் துரித உணவுகளில் செய்யப்படக்கூடிய பர்கர் பன்-களை செய்யலாம் பீட்சா செய்யலாம்.

வெளிநாடுகளில் தடை..

இப்படி விலை குறைவாகவும்,அதிக அளவிலும் இது கிடைப்பதால் தொழில் ரீதியாக உணவகங்கள் நடத்தி வரும் பலரும் இந்த மைதா மாவை பயன்படுத்தி தான் வருகிறார்கள்.ஆனாலும் அமெரிக்காவிலும் பல்வேறு மாகாணங்கள் மற்றும் ஐரோப்பியன் நாடுகள் பலவற்றிலும் இந்த மைதா மாவை தடை செய்திருக்கிறார்கள்.
அங்கே மைதா மாவில் செய்த எந்த ஒரு பொருளையும் உங்களால் பார்க்க முடியாது. அனைத்திலுமே கோதுமை மாவை மட்டுமே பயன்படுத்தி செய்கிறார்கள்.

maida benefits, maida made from, மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது, மைதா நன்மைகள்

அதை கேக்காக இருந்தாலும் சரி, பன்ணாக இருந்தாலும் சரி கோதுமை மாவு பயன்படுத்தியே செய்யப்படுகிறது.இந்த மைதா மாவு என்பது முற்றிலும் மனித குலத்திற்கு எதிரான ஒரு விஷயம். மக்கள் தொகை பெருக்கம் சீரற்ற உணவு முறை இவற்றால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியர்களின் குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த மைதாவின் பயன்பாடு என்பது அதிகரித்து இருக்கிறது.

இதையும் படிங்க :  " மருத்துவ குணம் உள்ள பூண்டு..!" - அட இவர்களெல்லாம் சாப்பிடக்கூடாதா?

இதுவே பல்வேறு இளம் வயதினருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு உண்டான காரணமாகவும் அமைந்திருக்கிறது.இதனை ஒரு முறை நீங்கள் சாப்பிட்டால் கூட உங்களுடைய செரிமான மண்டலத்தின் ஆயுளை குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.நான் நேற்றுதான் சாப்பிட்டேன் எனக்கு ஒன்றாம் ஆகவில்லை.. கடந்த ஐந்து வருடமாக சாப்பிட்டு வருகிறேன் எனக்கு ஒன்றும் ஆகவில்லை.. என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

maida benefits, maida made from, மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது, மைதா நன்மைகள்

ஆனால் உங்கள் செரிமான மண்டலத்தின் வயது குறைந்திருக்கும் என்பதை நாட்கள் செல்லச் செல்லத்தான் உங்களுக்கு தெரிய வரும்.மட்டுமில்லாமல் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே மக்களே செரிமான மண்டலத்துக்கு எளிமையான, செரிமான மண்டலம் எளிதாக செரிக்கக் கூடிய வகையிலான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

மைதாவை தவிர்த்து விடுங்கள்..

மைதாவால் செய்யப்பட்ட உணவு பொருட்களை தவிர்த்து விடுங்கள் அல்லது குறைத்துக்கொள்ளுங்கள்.கூடுதலாக இன்னொரு விஷயத்தையும் கூறுகிறோம். இந்தியர்கள் குறிப்பாக தென்னிந்தியர்களின் பிரதான உணவு அரிசி சோறு தான்.நீங்கள் உணவு அருந்தும் பொழுது எந்த அளவுக்கு அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை வைக்கிறீர்களோ..? அதே அளவுக்கு காய்கறியும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இப்படியான பழக்கம் என்று மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்து விட்டது. தட்டு நிறைய சாப்பாடு அதில் கொஞ்சம் சாம்பார் இப்படியே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.இது முற்றிலும் தவறானது. உங்களுடைய தட்டில் பாதி அளவு சாப்பாடு இருக்கிறது என்றால். அதே அளவுக்கான காய்கறிகள் இடம்பெற வேண்டும்.காய்கறிகள் கீரை வகைகள், முட்டை என எந்த அளவுக்கு சாப்பாடு வைக்கிறீர்களோ..? அதே அளவுக்கு இவையும் இருப்பது போல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

maida benefits, maida made from, மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது, மைதா நன்மைகள்

இப்படி உண்ணும் பொழுது உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும். உங்களுடைய செரிமான உறுப்பின் ஆயுள் அதிகமாகும். உங்கள் உடல் எடை சீராக ஒரே அளவில் இருக்கும்.நோய்கள் தாக்குவதற்கு உண்டான வாய்ப்புகள் குறையும். இதன் மூலம் உங்களுடைய ஆயுளும் விருத்தி ஆகும்.

எந்த ஒரு நோய் வந்தாலும் கூட அந்த நோயை உங்களுடைய உடலை சரி செய்து கொள்வதற்கு உண்டான சக்தி உங்கள் உடலுக்குள் இருக்கும்.அதை விட்டுவிட்டு வெறும் அரிசி சாதம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சரியான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது என்பதையும் இந்த வீடியோவின் மூலம் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

தொடர்ந்து உபயோகபூர்வமான தகவல்களை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top